ராம் அண்ட் லீலா படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியானது!
Ram and Leela movie Sneak Peek | தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் ரியோ ராஜ். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ராம் அண்ட் லீலா. இந்தப் படத்தில் இருந்து தற்போது ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து தற்போது ஹிட் படங்களில் நடித்து வருபவர் நடிகர் ரியோ ராஜ். இவரது நடிப்பில் சமீப காலமாக திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. வளர்ந்து வரும் நாயகன்களின் பட்டியலில் உள்ள நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் நேற்று 21-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் ராம் அண்ட் லீலா. முன்னதாக இந்தப் படத்திற்கு ராம் இன் லீலா என்றுதான் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் படம் சென்சார் சான்றிதழுக்காக தணிக்கை குழுவிடம் சென்ற போது படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று தணிக்கை குழு கூறியதைத் தொடர்ந்து ராம் அண்ட் லீலா என்று மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் ரியோ ராஜிற்கு ஜோடியாக நடிகை வர்த்திகா நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே நலல் வரவேற்பைப் பெற்று வருகின்றது.




ராம் அண்ட் லீலா படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியானது:
இந்த நிலையில் படத்தில் இருந்து ஸ்னீக் பீக் வீடியோவை நடிகர் ரியோ ராஜ் தனது எக்ஸ் தள் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவில் நடிகர் ரியோ ராஜ் மற்றும் அவரது தங்கையும் பேசிக்கொள்வது போல காட்டப்பட்டுள்ளது. அதில் ரியோவின் தங்கை தனக்கு ஒருவர் மீது காதல் இருப்பதாகவும் அது ரியோவின் நணபர் என்று தெரிவிக்கிறார். அதனைக் கேட்ட உடன் ரியோ ராஜ் கொடுக்கும் ரியாக்ஷன் சிரிக்கும் வகையில் உள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… என் மகன்கள் சினிமாவில் துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டும் – நடிகர் நாகர்ஜுனா
நடிகர் ரியோ ராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
#SneakPeek #RamAndLeelahttps://t.co/EQmLxO8Qo9@rio_raj @tridentartsoffl @eywaent @sude_v @sanjayvijayragh @ramachandr5017 @thinkmusicindia @apinternational @024vartika @i_nayan_aElza @mallikarjundp @Gdurairaj10 @chetan_k_a @malavikaBJP @kavinklusner @ync_shiva @viyaki_s pic.twitter.com/dmF22pL4bI
— Rio raj (@rio_raj) August 22, 2026