சாதாரண மக்களுக்கு இது வெறும் பொழுதுபோக்கு.. சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் பற்றி அதிதி சங்கர் பேச்சு!
Aditi Shankar About Vishwanath And Sons: தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநராக இருப்பவர் சங்கர். இவரின் மகளும், நடிகையாக இருந்துவருபவர் அதிதி சங்கர். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் குறித்து பரபரப்பான விஷயம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அதிதி சங்கர் (Aditi Shankar). இவர் தென்னிந்திய பிரபல இயக்குநர் எஸ். சங்கரின் (S Shankar) மகள் ஆவார். சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தினால் தற்போது நடிகையாக படங்களில் நடித்துவருகிறார். இயக்குநர் முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடித்திருந்த விருமன் (Viruman) என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) மற்றும் அர்ஜுன் தாஸ் (Arjun Das) போன்ற நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்துவந்தார். இவரின் நடிப்பில் இறுதியாக தமிழில் வெளியான திரைப்படம் நேசிப்பாயா. இதில் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின் தெலுங்கில் பைரவம் என்ற திரைப்படத்திலும் நடித்தார். இதுதான் இவருக்கு முதல் தெலுங்கு திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2026ம் ஆண்டில் இவரின் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் படம் ஒன்ஸ் மோர் (Once More). இதில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் புரோமோஷன் தொடர்பாக நேர்காணல் ஒன்றினுள் அதிதி சங்கர் கலந்துகொண்டார். அதில் அவரிடம் தொகுப்பாளர், சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் மமிதாவின் கதாபாத்திரம் தனக்கு பிடிக்கவில்லை என்றும், அது உங்களுக்கு எப்படி இருந்தது? என கேள்வி கேட்டார். அதற்க்கு நச் பதிலை அதிதி சங்கர் கொடுத்துள்ளார்.




இதையும் படிங்க: என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்… 16 ஆண்டுகளைக் கடந்தது கார்த்தியின் நான் மகான் அல்ல படம்!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் குறித்து அதிதி சங்கர் பேசிய விஷயம்:
அந்த பேட்டியில் பேசியிருந்த அதிதி சங்கர், “நீங்கள் பார்க்கும் விதத்தில் பார்வையாளர்கள் சினிமாவைப் பார்க்க மாட்டார்கள். நீங்கள் ஒரு விமர்சனக் கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள். சாதாரண மக்களுக்கு இது வெறும் பொழுதுபோக்கு.
இதையும் படிங்க: அமெரிக்காவில் விஸ்வநாத் & சன்ஸ் படம் மொத்தம் வசூலித்தது இவ்வளவா? அப்டேட்டை வெளியிட்ட படக்குழு
அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடவும், பாப்கார்னை ரசித்துச் சாப்பிடவும், 3 மணி நேரம் பொழுதுபோக்கவும் மட்டுமே விரும்புகிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் அப்படித்தான் பார்ப்பார்கள்” என அந்த தொகுப்பாளரின் ஏடாகூடமான கேள்விக்கு சிறப்பாக பதிலளித்திருந்தார். இது தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவிவருகிறது.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் குறித்து அதிதி சங்கர் பேசியதாக வைரலாகும் பதிவு:
#Baradwaj: In #VishwanathAndSons, MamithaBaiju was shown as a person who wants to become doctor, but with no strong reason, she wants to be with #Suriya. That character didn’t work for me. How you see this❓#AditiShankar: Audience won’t look at cinema, the way you are looking.… pic.twitter.com/J6WCZ25F0I
— AmuthaBharathi (@CinemaWithAB) August 19, 2026
அர்ஜுன் தாஸ், அதிதி சங்கர் லீட் நடிகர்களாக நடித்துள்ள படம் ஒன்ஸ் மோர். இதை இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்க, சிறப்பான காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த படமானது பீல் குட் காதல் படமாக உருவாகியுள்ள நிலையில், இதன் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.