ஒன்ஸ் மோர் படத்திலிருந்து வெளியானது பதில் சொல் பொயட்ரி வீடியோ
Badhil Sol - Poetry | தமிழ் சினிமாவில் பிரபல நாயகனாக வலம் வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். இவரது நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வரும் நிலையில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஒன்ஸ் மோர். இந்தப் படத்தில் இருந்து தற்போது வீடியோ வெளியாகி உள்ளது.
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். இவரது நடிப்பில் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் அடுத்தடுத்தப் படங்களின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று திரையரங்குகளில் படங்களில் நடித்து வருகிறார். நடிகர் அர்ஜுன் தாஸ் வில்லனாக பிரபலம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து நாயகனாக நடிக்கத் தொடங்கினார். நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு வில்லனாக நடிப்பதை தவிர்க்காமல் வில்லனாகவும் முன்னணி நடிகர்களுக்கு நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கும் படங்களும் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியான படம் கான் சிட்டி.
இந்த கான் சிட்டி படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ஓடிடியிலும் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஒன்ஸ் மோர்.




ஒன்ஸ் மோர் படத்திலிருந்து வெளியானது பதில் சொல் பொயட்ரி வீடியோ:
இந்தப் படத்தை இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுதி இயக்கி உள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆண்டே முடிவடைந்த நிலையில் படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் படம் வருகின்ற 28-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தொடர்ந்து இந்தப் படத்தில் இருந்து அப்டேட்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது பதில் சொல் என்ற பொயட்ரி வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Mandaadi: சூரியின் மண்டாடி பட ‘உசுரே நீதான் புள்ள’ பாடல் புரோமோ வெளியீடு!
ஒன்ஸ் மோர் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
A memory of rage wrapped in the warmth of grief..
“Badhil Sol” – Poetry from Oncemore is out now ❤️
🔗 https://t.co/AcFhDkmfgR#OnceMore hits theatres worldwide on AUGUST 28th 🎬🍿Written & directed by @isrikanthmv 🎬
A @heshamawmusic musical 🎶 @iam_arjundas… pic.twitter.com/AsL7RfJOGl— Million Dollar Studios (@MillionOffl) August 15, 2026
Also Read… சுப்ரமணியபுரம் 2 படம் உருவாகுமா? சசிகுமார் விளக்கம்!