ரஜினிகாந்த் சாரை முதன்முதலில் சந்தித்த போது… நடிகை ஸ்ரேயா சரணின் சுவாரஸ்ய பேச்சு
Shriya Saran About Rajinikanth | பான் இந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்தை முதன்முதலாக சந்தித்த போது என்ன நடந்தது என்பது குறித்து வெளிப்படையாக பேசியது வைரலாகி வருகின்றது.
தெலுங்கு சினிமாவில் கடந்த 2001-ம் ஆண்டு தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் நடிகை ஸ்ரேயா சரண். தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் மட்டும் இன்றி அடுத்தடுத்து தமிழ் மற்றும் இந்தி மொழிகளிலும் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். தமிழ் சினிமாவில் கடந்த 2003-ம் ஆண்டு தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய நடிகை ஸ்ரேயா சரண் தொடர்ந்து முன்னணி நாயகன்களுக்கு ஜோடியாக பலப் படங்களில் நடித்து உள்ளார். அதன்படி நடிகை ஸ்ரேயா சரண் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகன்களாக வலம் வரும் நடிகர்கள் ரவி மோகன், தனுஷ், ரஜினிகாந்த், விஜய், விஷால், விக்ரம், ஜீவா என பலருடன் இணைந்து நடித்து உள்ளார். இவரது நடிப்பில் வெளியான பெரும்பான்மையான படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் பிசியான நாயகியாக வலம் வரும் நடிகை ஸ்ரேயா சரண் திருமணத்திற்கு பிறகு அதிக அளவில் படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகின்றது. மேலும் அவ்வபோது இணையதள தொடர்களிலும் நடிகை ஸ்ரேயா சரண் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.




ரஜினிகாந்த் சாரை முதன்முதலில் சந்தித்த போது:
இந்த நிலையில் நடிகை ஸ்ரேயா சரண் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை முதன்முறையாக சந்தித்த அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்தப் பேட்டியில் அவர் பேசியதாவது, சங்கர் சார் என்னை அழைத்து, ஒரு படம் இருக்கிறது, அதில் நீங்கள் நடிப்பீர்களா? என்று கேட்டார். நான் சம்மதித்தேன், அவரும் சரி என்றார். நான் அங்கு சென்றபோது, ஏ.ஆர். ரஹ்மான் சார் மற்றும் ரஜினிகாந்த் சார் போன்ற பல முக்கியப் பிரமுகர்கள் அங்கு வந்து கொண்டிருந்தனர். பல பெரிய ஆளுமைகள் வருவதைப் பார்த்ததும், இது நிச்சயம் ஒரு மிகப்பெரிய படமாகத்தான் இருக்க வேண்டும் என்று நான் சங்கரிடம் நினைத்துக்கொண்டேன். பிறகு அவர், உங்கள் சக நடிகரான ரஜினிகாந்த் சார் என்று கூறினார். நான், சரி… என்று சொன்னேன். அங்கு ஏ.ஆர். ரஹ்மான் சாரும் இருந்தார், கே.வி. ஆனந்த் சார் ஒளிப்பதிவாளராக இருந்தார் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… விஜய் சேதுபதியின் ட்ரெயின் படத்தின் சென்சார் அப்டேட் வெளியானது
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Shriya about First Meeting With #Rajinikanth:
So, #Shankar sir called me and said, “There’s a movie. Will you work in it?” I said yes, and he said, “Okay.”
When I reached there, many big personalities were coming — #ARRahman sir, #Rajinikanth sir. So, I looked at #Shankar and… pic.twitter.com/Tb2g2NC1UQ
— Filmyscoops (@Filmyscoopss) August 13, 2026
Also Read… செப்டம்பருக்கு தள்ளிப்போன துல்கர் சல்மானின் ஐ அம் கேம் படத்தின் ரிலீஸ்… சோகத்தில் ரசிகர்கள்