விஜய் சேதுபதியின் ட்ரெயின் படத்தின் சென்சார் அப்டேட் வெளியானது
Train movie gets a UA censor certificate | தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து உள்ள படம் ட்ரெய்ன். இந்தப் படத்தின் சென்சார் தொடர்பான அப்டேட்டை தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
பான் இந்திய மொழிகளில் பிசியான நாயகனாக வலம் வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தமிழ் சினிமாவில் க்ரவுட் ஆர்ட்டிஸ்டாக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய நடிகர் விஜய் சேதுபதி தற்போது பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் முதலாவதாக வெளியான படம் காந்தி டால்க்ஸ். தற்போது சினிமா ரசிகர்கள் பார்த்திராத ஒரு பாணியில் உருவாகி ரசிகர்களுக்கு வித்யாசமான அனுபவத்தை அளித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் ஒரு எக்ஸ்பிரிமெண்டாக இருந்தாலும் மக்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து உருவாகும் படம் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள ட்ரெய்ன் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.




விஜய் சேதுபதியின் ட்ரெயின் படத்தின் சென்சார் அப்டேட் வெளியானது:
இந்த ட்ரெய்ன் படத்தை இயக்குநர் மிஸ்கின் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி உடன் இணைந்து நடிகர்கள் நாசர், ஸ்ருதிஹாசன், யுகி சேது, நரேன், கே.எஸ்.ரவிக்குமார், சம்பத் ராஜ், கலையரசன், இரா.தயானந்த், அஜய் ரத்னம், வின்சென்ட் அசோகன், பப்லூ பிரிதிவீராஜ், திருக்குன் அருண், கணேஷ் வெங்கட்ராமன், ப்ரீத்தி கரண், சிங்கம்புலி, சுரேஷ் சந்திர மேனன், ஷாஜி, செல்வா, க. ஜனனி, தியா சர்மா, கோமகன் என பலர் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தின் சென்சார் தொடர்பான அப்டேட்டை தற்போது தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணு வெளியிட்டுள்ளார். அதன்படி படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… 4 நாட்களில் டிசி படம் வசூலித்தது இத்தனை கோடிகளா? கொண்டாட்டத்தில் படக்குழு
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Train censored U/A🔥@mysskindirector @VijaySethuOffl @shrutihaasan @nasser_kameela @ksravikumardir @ira_dayanand @itsNarain @preethy_karan @KalaiActor @ActorRohan02 #YugiSethu @fowziafathima @editorsriwat #TapasNayak #StreetLight @vijaytelevision @RIAZtheboss@parasriazahmed1… pic.twitter.com/3TFDpQaROK
— Kalaippuli S Thanu (@theVcreations) August 12, 2026