AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

4 நாட்களில் டிசி படம் வசூலித்தது இத்தனை கோடிகளா? கொண்டாட்டத்தில் படக்குழு

DC Movie Boxoffice Collection For 4 Days | லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகம் ஆன டிசி படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் உலகம் முழுவதும் 4 நாட்களில் எத்தனை கோடிகள் வசூலித்தது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

4 நாட்களில் டிசி படம் வசூலித்தது இத்தனை கோடிகளா? கொண்டாட்டத்தில் படக்குழு
டிசி படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Aug 2026 10:46 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வந்து தற்போது நாயகனாக உறுவெடுத்து உள்ளார் லோகேஷ் கனகராஜ். இவர் முன்பு அவர் இயக்கும் படங்களில் சின்ன சின்ன கேமியோ வேடங்களில் நடித்து வந்தார். தற்போது மற்றொரு இயக்குநரின் இயக்கத்தில் நாயகனாக நடித்து உள்ளார். அதன்படி இயக்குநர் அருண் மாதேஸ்வரன் எழுதி இயக்கி உள்ள படம் டிசி. இந்தப் படத்தில் நடிகர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்து உள்ளார். இந்த டிசி படத்தின் மூலமாக அவர் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் இவருடன் இணைந்து நடிகர்கள் வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய், அவினாஷ் ரகுதேவன், ஸ்ரீகிருஷ்ண தயாள், பாலாஜி தேவிபிரசாத், ஜவஹர் சக்தி, பிரணவ் தியோபின் மற்றும் கஸ்தூரி ராஜா என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

இந்தப் படம் கடந்த 07-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியானதில் இருந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள நிலையில் பாடல்களும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

4 நாட்களில் டிசி படம் வசூலித்தது இத்தனை கோடிகளா?

தொடர்ந்து திரையரங்குகளில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் இந்த டிசி படம் 4 நாட்களில் எத்தனை கோடிகள் வசூல் செய்துள்ளது என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி படம் 4 நாட்களில் உலக அளவில் சுமார் 50 கோடிகள் வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்ப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… விஸ்வநாத் & சன்ஸ் படத்தில் வரும் அந்த காட்சி உண்மையிலேயே சூர்யா வாழ்க்கையில் நடந்த சம்பவம் – வைரலாகும் தகவல்

டிசி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… GV Prakash: எனது அந்த படங்களுக்கும் தேசிய விருது கிடைக்கும் என்று நினைத்தேன் – ஜி.வி. பிரகாஷ்!

Follow Us