Suriya: விஸ்வநாத் & சன்ஸ் பட நடிகையின் முதல் தேர்வே மமிதாதான் – சூர்யா!
Suriya Praises Mamitha Baiju: தென்னிந்திய மொழி படங்களில் ரசிகர்கள் ரசிக்கும் நாயகனாக இருப்பவர் சூர்யா. இவரின் விஸ்வநாத் & சன்ஸ் படமானது வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியாகிறது. சமீபத்தில் கேரளாவில் நடந்த ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, மமிதா பைஜூவின் நடிப்பை பாராட்டியுள்ளார்.
ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவே கொண்டாடவும் நடிகர்களில் ஒருவர்தான் சூர்யா (Suriya). இவரை தற்போது ரசிகர்கள் தி ஒன் (The One) என்று பாசமாக அழைத்துவருகிறார்கள். இவரின் நடிப்பில் இதுவரை மொத்தம் 45 திரைப்படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வரிசையில் 46வது திரைப்படமாக உருவாகியிருப்பதுதான் விஸ்வநாத் & சன்ஸ் (Vishwanath & Sons). இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி (Venky Atluri) நேரடி தமிழ் மொழியில் இயக்கியுள்ளார். இதை சித்தாரா என்டேர்டைமெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் குமார் (GV Prakash Kumar) சிறப்பாக இசையமைத்துள்ளார். இவரின் இசையில் இப்படம் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளதாம்.
இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் கேரளாவில் சிறப்பாக நடைபெற்றிருந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய சூர்யா, நடிகை மமிதா பைஜூவின் (Mamitha Baiju) நடிப்பு மற்றும் விஸ்வநாத் & சன்ஸ் படத்தில் அவர் நடித்துள்ள கதாபாத்திரம் குறித்து பாராட்டி பேசியிருக்கிறார்.




இதையும் படிங்க: 300 வருடம் வாழும் ஒரு வேம்பையர்.. இம்மார்டல் படத்தின் கதை இப்படிதான் இருக்கும் – ஜி.வி.பிரகாஷ் குமார் ஓபன் டாக்!
நடிகை மமிதா பைஜூவின் நடிப்பு குறித்து பாராட்டிய சூர்யா:
அண்ட் நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, “மமிதா ஒரு சின்ன சின்ன வேடங்கள், குழந்தை நட்சத்திரம் மற்றும் துணை நடிகையாக நடிக்க ஆரம்பித்து, தற்போது நாயகியாக மேடையின் நடுவே இருக்கிறார். இந்த விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் கதை வெளியே வரும்போது, யாரை இதில் நடிகையாக நடிக்கவைக்கலாம் என யோசனை வந்ததும், எங்களுக்கு எந்த ஆப்சனும் இல்லாமல், மமிதாவையே முதல் தேர்வாக எடுத்தோம். அந்த அளவிற்கு அவர் அழகாக வளர்த்திருக்கிறார்.
இதையும் படிங்க: வாரணாசி படத்தில் மகேஷ் பாபுவின் கதாப்பாத்திரம் எப்படி இருக்கும்? இயக்குநர் ராஜமௌலி விளக்கம்
அவர் அவரின் திறமையை மிகவும் சிறப்பாக வளர்த்துள்ளார், விஸ்வநாத் & சன்ஸ் படத்தில் அவர் நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் சரியான தேர்வு அவர்தான். இந்த வேடத்திற்கு மிகவும் பொருத்தமானவர். அவர் இன்னும் வாழ்க்கையில் வெகுதூரம் பயணிக்கவேண்டும், இப்படத்தில் அவரின் எனர்ஜி மிகவும் நன்றாக இருக்கிறது” என அதில் அவர் பேசியிருந்தார்.
மமிதா பைஜூவை பாராட்டி நடிகர் சூர்யா பேசியது தொடர்பான வீடியோ பதிவு:
#MamithaBaiju gets Emotional when #Suriya praises her..❣️🤝 pic.twitter.com/3BfUufiJXM
— Laxmi Kanth (@iammoviebuff007) August 8, 2026
சூர்யா மற்றும் மமிதா பைஜூ நடித்துள்ள திரைப்படம் விஸ்வநாத் & சன்ஸ். இப்படம் பேமிலி பேக்ரவுண்ட் கதைக்களத்தில், மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது இதில் இவர்களுடன் ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா டாண்டன் போன்ற பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.