AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வாரணாசி படத்தில் மகேஷ் பாபுவின் கதாப்பாத்திரம் எப்படி இருக்கும்? இயக்குநர் ராஜமௌலி விளக்கம்

SS Raja Mouli talks about actor Mahesh Babu role in the Varanasi movie | தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் மகேஷ் பாபு. இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வாரணாசி.

வாரணாசி படத்தில் மகேஷ் பாபுவின் கதாப்பாத்திரம் எப்படி இருக்கும்? இயக்குநர் ராஜமௌலி விளக்கம்
ராஜமௌலி மற்றும் மகேஷ் பாபுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Aug 2026 15:38 PM IST

தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் மகேஷ் பாபு. இவரது நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து வரும் நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் வாரணாசி. இந்தப் படத்தை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி எழுதி இயக்கி வருகின்றார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. படத்தில் நடிகர் மகேஷ் பாபு நாயகனாக நடிக்க நடிகை பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பிரித்விராஜ் சுகுமாரன் மற்றும் பிரகாஷ் ராஜ் உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருவது குறிப்பிடதக்கது.

மேலும் இந்தப் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 7-ம் தேதி 2027-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி சமீபத்தில் பேட்டி ஒன்றில் வாரணாசி படத்தில் நடிகர் மகேஷ் பாபுவின் கதாப்பாத்திரம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வாரணாசி படத்தில் மகேஷ் பாபுவின் கதாப்பாத்திரம் எப்படி இருக்கும்?

ருத்ரா ஒரு சாதாரண பயணத்திற்காகப் படைக்கப்படவில்லை. அவன் தன்னை விடப் பெரிய ஒரு விதியைச் சுமக்கிறான். புத்திசாலித்தனம், பலவீனம் மற்றும் ஆக்ரோஷம் ஆகிய மூன்று குணங்களும் அவனிடம் உள்ளன. மகேஷ் இந்த மூன்று குணங்களையும் அபூர்வமான உறுதியுடன் உயிர்ப்பிக்கிறார். ஒரே நேரத்தில் ஆக்ரோஷமாகவும் பலவீனமாகவும் இருப்பதில்தான் உண்மையான தீவிரம் அடங்கியுள்ளது என்பதை நிரூபிக்கிறார்.

கிளிமஞ்சாரோ மற்றும் மசாய் மாராவைச் சுற்றியுள்ள எங்கள் ஆப்பிரிக்கப் பயணத் திட்டம், எந்தவொரு படப்பிடிப்புத் தளத்தாலும் மீண்டும் உருவாக்க முடியாத ஒன்றை எங்களுக்கு வழங்கியது. அதன் பிரம்மாண்டம், வனாந்தரம், அங்குள்ள ஒளி… நாங்கள் கண்டுகொண்டிருந்தவற்றுக்கு, 1.43:1 ஐமேக்ஸ் திரை கூட சில சமயங்களில் மிகவும் சிறியதாகத் தோன்றியது என்று இயக்குநர் ராஜமௌலி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Vishal: வேற யாராவது இருந்தால் பிச்சிட்டு ஓடியிருப்பாங்க.. வருங்கால மனைவி சாய் தன்ஷிகா குறித்து புகழ்ந்து பேசிய விஷால்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… கோட் படத்தின் நடிகர்கள் தேர்வு இப்படிதான் இருந்தது – தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி

Follow Us