Vishal: வேற யாராவது இருந்தால் பிச்சிட்டு ஓடியிருப்பாங்க.. வருங்கால மனைவி சாய் தன்ஷிகா குறித்து புகழ்ந்து பேசிய விஷால்!
Vishal Praises His Fiancée Sai Dhanshika: தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகனாக நடித்து ரசிகர்களை கவர்ந்துவருபவர் விஷால். இவரின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள புது திரைப்படம்தான் மகுடம். இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய விஷால், தனது வருங்கால மனைவி சாய் தன்ஷிகா குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
நடிகர் விஷால் (Vishal) தமிழ் திரைத்துறையில் எந்நேரமும் பிசியாக இருந்து வருகிறார். இவர் தென்னிந்திய நடிகர்கள் சங்க பொது செயலாளராக இருந்துவரும் நிலையில், அந்த பணிகளையும் சிறப்பாக செய்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புது திரைப்படங்கள் வெளியாகிவரும் நிலையில், நல்ல வரவேற்பை பெரும். இந்த 2026ம் ஆண்டில் விஷாலின் நடிப்பிலும், இயக்கத்திலும் வெளியாகவுள்ள புது படம்தான் மகுடம் (Magudam). 22 ஆண்டுகளாக வெறும் நடிகராக பணியாற்றிவந்த விஷால், மகுடம் படத்தின் மூலமாக இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ளார். இந்த மகுடம் படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் கேங்ஸ்டர்ஸ் கதைக்களத்தில் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திலிருந்து பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் நேற்று (07/08/2026) இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியானது நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்ச்சியில் பேசிய விஷால், தனது வருங்கால மனைவி சாய் தன்ஷிகா (Sai Dhanshika) தனக்கு கொடுத்த உத்வேகம் மற்றும் ஆதரவு குறித்து பேசியிருக்கிறார்.




இதையும் படிங்க: ஓணம் ரேசில் இணைந்தது நிவின் பாலியின் பெத்தலேக குடும்ப யூனிட் – வைரலாகும் பதிவு
தனது வருங்கால மனைவி சாய் தன்ஷிகா குறித்து விஷால் பேசிய விஷயம்:
மகுடம் பட ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய விஷால், “நான் கடந்த 14ம் மாதங்களுக்கும் மேலாக எந்த படங்களிலும் நடிக்கமுடியாமல் கிடந்தேன். சில பர்சனல் விஷயங்களால் முடங்கி கிடந்தேன். அந்த சூழலில் எனது வருங்கால மனைவி சாய் தன்ஷிகாதான் ஆதரவாகவும் மற்றும் ஊக்கமும் எனக்கு கொடுத்தார். இதே வேறு யாராவதாக இருந்தாலே எப்போதோ பிச்சிட்டு போயிருப்பாங்க, அதனால் சாய் தன்ஷிகாவிற்கு கடமைப்பட்டிருப்பதாக” என அதில் அவர் வெளிப்படையாக பேசியிருந்தார்.
இதையும் படிங்க: பேமிலி பேக்ரவுண்ட் கதையில்… சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட ட்ரெய்லர் வெளியானது!
மகுடம் பட ட்ரெய்லர் குறித்து நடிகர் விஷால் வெளியிட்ட பதிவு:
Trailer Out Now🔥
The celebration has begun. The crown is rising🔥#Magudam / #Makutam Trailer is Here –
Tamil – https://t.co/IUXiBa6NIV
Telugu – https://t.co/rq4i6dwug4#DirectorVishal #MagudamTrailer #MakutamTrailer #MagudamReleaseOnAug14th #MakutamReleaseOnAug14th… pic.twitter.com/0g5DjdxKFO
— Vishal (@VishalKOfficial) August 8, 2026
விஷாலின் இந்த மகுடம் படத்தில் அஞ்சலி மற்றும் துஷாரா விஜயன் இணைந்து நடித்துள்ளார்கள். இதில் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க, விஷால் இயக்கியிருந்தார். இப்படம் அதிரடி ஆக்ஷன் மற்றும் திரில்லர் கதையில் உருவாகியுள்ள நிலையில், 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. மேலும் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.