AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இணையத்தில் வைரலாகும் விஷாலின் மகுடம் பட ட்ரெய்லர்

Vishals Magudam movie trailer viral on social media | தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் விஷால் தற்போது மகுடம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இந்த நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இணையத்தில் வைரலாகும் விஷாலின் மகுடம் பட ட்ரெய்லர்
மகுடம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Aug 2026 11:57 AM IST

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருபவர் நடிகர் விஷால். இவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் விஷால் நாயகனாகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்ததாகவே இருக்கும். இவர் நாயகனாக அறிமுகம் ஆனது முதல் தொடர்ந்து பலப் படங்களில் ஆக்‌ஷன் நாயகனாகவே நடித்து உள்ளார். எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் விஷால் அந்த கதாப்பாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகர் விஷால் தற்போது இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறார்.

அந்த வகையில் நடிகர் விஷால் தனது மகுடம் படத்தை தானே இயக்கி நாயகனாகவும் நடித்து உள்ளார். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடிகர்கள் அஞ்சலி, துஷாரா விஜயன், ஜான் விஜய், ஜெய பிரகாஷ், அஜய், வம்சி கிருஷ்ணா, அபு சலீம், அர்ஜெய், விஜே ஜான்சி, பதம் குமார் மற்றும் சாபுமோன் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து பாடல்களும் தொடர்ந்து வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

இணையத்தில் வைரலாகும் விஷாலின் மகுடம் பட ட்ரெய்லர்:

இந்த நிலையில் மகுடம் படம் வருகின்ற 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது. இந்த ட்ரெய்லர் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் இந்த ட்ரெய்லரை பார்க்கும் போது ஆக்‌ஷன், காமெடி மற்றும் ஃபேமிலி செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கலவையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்

நடிகர் விஷால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜன நாயகன் படத்தில் அந்த காட்சி விஜய் சாருக்கு ரொம்ப பிடித்தது – இயக்குநர் எச். வினோத் ஓபன் டாக்

Follow Us