சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்
Vishwanath And Sons Movie Trailer Release Update | தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வரும் நடிகர் சூர்யவின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு எப்போது என்று அப்டேட் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நடிகராக மட்டும் இன்றி ப்ளாக் பஸ்டர் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் கருப்பு. இந்த கருப்பு படம் தான் நடிகர் சூர்யாவின் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் வெளியான முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் சூர்யாவின் நடிப்பில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. இந்த 2026-ம் ஆண்டின் தொடக்கமே சூர்யாவிற்கு ப்ளாக் பஸ்டர் வெற்றியை கருப்பு கொடுத்தது அவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி உடன் தனது அடுத்தப் படத்திற்காக நடிகர் சூர்யா கூட்டணி வைத்தார்.
இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே தொடர்ந்து அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படத்திற்கு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிப்பாளர் நாக் வம்சி தயாரித்து உள்ளார். மேலும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.




விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா?
முன்னதாக இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. மேலும் படம் வருகின்ற 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் ட்ரெய்லர் வருகின்ற 07-ம் தெதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு வெளியாக உள்ளது. இந்த தகவல் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… தமிழ் டூ தெலுங்கு.. தென்னிந்திய சினிமாவில் பிரபலமான இந்த சிறுமி எந்த நடிகைனு தெரியுமா?
விஸ்வநாத் & சன்ஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Every family has a story.
Every story has a heartbeat. ❤️#VASTrailer arrives on AUGUST 7th. 😍#VishwanathAndSons in cinemas on Aug 14th. 🫶🏻
9 days to go. ❤️🔥#VASonAUG14th @Suriya_offl #VenkyAtluri @_mamithabaiju @realradikaa @TandonRaveena @gvprakash @vamsi84 @NavinNooli… pic.twitter.com/TBEsqK2g1v— Sithara Entertainments (@SitharaEnts) August 5, 2026
Also Read… கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் புற்றுநோயால் காலமானார்!