AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழ் டூ தெலுங்கு.. தென்னிந்திய சினிமாவில் பிரபலமான இந்த சிறுமி எந்த நடிகைனு தெரியுமா?

Actress Childhood Photo: தென்னிந்திய சினிமாவில் திரைப்பட பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவரும். அந்த வகையில் இந்த போட்டோவில் இருக்கும் சிறுமி எந்த நடிகை-னு தெரியுமா?. இவர் தமிழ் டூ தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமானவர். இந்த சிறுமி யார் என விவரமாக பார்க்கலாம்.

தமிழ் டூ தெலுங்கு.. தென்னிந்திய சினிமாவில் பிரபலமான இந்த சிறுமி எந்த நடிகைனு தெரியுமா?
தமிழ் நடிகையின் சிறுவயது புகைப்படம்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 05 Aug 2026 08:22 AM IST

சினிமாவில் நடிகைகள் மற்றும் பிரபலங்களில் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருவதுண்டு. அந்த விதத்தில் மேலே உள்ள புகைப்படத்தில் உள்ள சிறுமி யாருனு தெரியுமா?. இந்த நடிகை தமிழ் சினிமா (Tamil Cinema) மற்றும் தெலுங்கு சினிமாவில் (Telugu Cinema) மிகவும் பிரபலமானவர். இவர் ரவி மோகன் (Ravi Mohan) முதல் அல்லு அர்ஜுன் (Allu Arjun) வரை பல்வேறு உச்ச நடிகர்களுடன் இந்த இணைந்து படங்களில் பணியாற்றியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டில் நேசன் வெங்கடேசன் இயக்கத்தின் மூலமாக சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். அதற்கு பிறகு தெலுங்கு சினிமாவிலும் நாயகியாக அறிமுகமானார். இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் நாயகியாக நடித்து அசத்திவருகிறார்.

தற்போது இவர் பெரிதாக படங்களில் ஒன்றில் நடிக்கவில்லை. மேலும் இந்த நடிகை பிரபல அரசியல்வாதி மற்றும் நடிகருமான ஒருவரை காதலித்து வருவதாக வட்டாரங்களில் பேசப்பட்டது. இப்போது தெரிந்திருக்கும் என நினைக்கிறேன், அந்த சிறுமி வேறுயாருமில்லை, நடிகை நிவேதா பெத்துராஜ்தான் (Nivetha Pethuraj).

இதையும் படிங்க: அரசன் படத்தில் சிம்புவின் அம்மாவா நான்? – விளக்கம் கொடுத்த ஆண்ட்ரியா ஜெர்மையா

நடிகை நிவேதா பெத்துராஜின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj)

நடிகை நிவேதா பெத்துராஜ் கடந்துவந்த சினிமா பயணம்:

நடிகை நிவேதா பெத்துராஜ் ஆரம்பத்தில் மாடலிங் துறையில் இருந்தவர். பின் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், 2016ம் ஆண்டில் ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் அடியே அழகே என்ற பாடலின் மூலமாக மிகவும் பிரபலமானார். இந்த படத்திற்கு பின் தனது 2வது படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக பிரபலமானார். அந்த படம்தான் பொதுவாக என் மனசு தங்கம். இந்த படத்திற்கு பின் 2017ம் ஆண்டில் மெண்டல் மதிலோ என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.

இதையும் படிங்க: வாரணாசி பட ஷூட்டிங் 80 சதவீதம் ஓவர் – இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி கொடுத்த அப்டேட்!

இவ்வாறு தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து அசத்தினார். மேலும் 2020ம் ஆண்டில் ஆலா வைகுந்தபுரம்லோ என்ற படத்தில் அல்லு அர்ஜூனுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பின், தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. இறுதியாக இவர் சிங்கீதம் என்ற படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us