கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் புற்றுநோயால் காலமானார்!
Villain Actor Pradeep Rawat passed Due To Blood Cancer | பான் இந்திய மொழிகளில் வில்லன் நடிகராக பலப் படங்களில் நடித்து ரசிகர்களை மிரட்டிய நடிகர் பிரதீப் ராவத் ரத்த புற்று நோய் காரணமாக காலமானார். இது ரசிகர்களையும் திரையுலக பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இந்தி சினிமாவில் கடந்த 1985-ம் ஆண்டு முதல் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார் நடிகர் பிரதீப் ராவத். நடிக்க தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் சின்ன சின்ன பெயரிடப்படாத வேடங்களில் நடித்து வந்த இவர் கடந்த 1988-ம் ஆண்டு முதல் கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்தார். இவர் நடிகராக நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்து தொடர்ந்து வில்லன்களின் அடியாளாக நடித்ததில் இருந்து வில்லன் கதாப்பாத்திரம் வரை தொடர்ந்து நெகட்டிவ் கதாப்பாத்திரங்களையே ஏற்று நடித்தார். படங்களில் நடிகர்கள் ஒரு கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்கும் போது அது ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி வில்லனாக பிரதீப் ராவத் எந்தப் படத்தில் நடித்தாலும் அதனைப் பார்க்கும் ரசிகர்கள் பிரதீப் ராவத்தை பார்த்து பயந்துவிடுவதும் வழக்கம்.
இவர் இந்தி சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என பான் இந்திய மொழிகளில் அதிக அளவில் படங்களில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் இவரது நடிப்பில் உருவாகி ரசிகர்களை அதிக அளவில் வரவேற்பைப் பெற்றப் படம் கஜினி. தமிழ் சினிமாவில் எத்தனை படங்களில் நடித்து இருந்தாலும் கஜினி படத்தில் இரட்டை வேடத்தில் மிகவும் கொடூர வில்லனாக இவர் நடித்த இந்த கதாப்பாத்திரம் மக்களிடையே அதிக கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
Also Read… சூர்யா 47 படத்தின் ரிலீஸ் எப்போது? நடிகர் சூர்யா விளக்கம்




கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் புற்றுநோயால் காலமானார்:
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் பல நூறு படங்களில் நடித்து வந்த நடிகர் பிரதீப் ராவத் கடந்த சில ஆண்டுகளாக ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிக்சைப் பெற்று வந்தார். 74 வயதான இவர் ரத்த புற்றூ நோயால் காலமானார். இந்த செய்தி பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவரின் இழப்பிற்கு குடும்பத்தினருக்கு தொடர்ந்து இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
Also Read… பிக்பாஸ் தமிழ் சீசன் 10-ல் புது மாற்றம்… ஒளிபரப்பாக உள்ளது தி காமென் மேன் நிகழ்ச்சி!