புதுப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த கௌதம் வாசுதேவ் மேனன்
Gautham Vasudev Menon New Movie Shooting Update | தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் முன்னணி இயக்குநராக வலம் வரும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் புதுப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் கடந்த 2000-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். அதன்படி நடிகர் மாதவன் நாயகனாக நடித்த மின்னலே என்ற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகம் ஆன கௌதம் வாசுதேவ் மேனன் தனது முதல் படத்திலேயே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை தமிழ் சினிமாவில் இயக்கி உள்ளார் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் தொடர்ந்து படங்களை இயக்குவது மட்டும் இன்றி கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் படங்களில் நடிக்கவும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சினிமாவில் பிசியான நபராக வலம் வரும் கௌதம் வாசுதேவ் மேனன் இறுதியாக மலையாள சினிமாவில் டாம்னிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ் என்ற படத்தை இயக்கி இருந்தார்.
நடிகர் மம்முட்டி நாயகனாக நடித்து இருந்த இந்தப் படத்தின் மூலமாகதான் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மலையாள சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் பத்து ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கிய துருவ நட்சத்திரம் படம் இதுவரை வெளியாக பல தடைகளை சந்தித்து வருவது அனைவரும் அறிந்தது.




புதுப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த கௌதம் மேனன்:
இந்த நிலையில் அடுத்ததாக இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கும் படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் இணையத்தில் வெளியான தகவலில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது புதிய நட்சத்திரக் கூட்டணியைக் கொண்டு ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பின் முதல் கட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த கட்டப் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது என்றும் தகவல்கள் வைரலாகி வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Director #GVM is currently directing a film featuring a fresh cast. The first schedule of shooting has been completed successfully, and the next schedule is set to begin later this month. pic.twitter.com/XGIyutm8rh
— Movie Tamil (@_MovieTamil) August 1, 2026