ஸ்கூல் படிக்கும் போது எனக்கு இங்கிலீஸ் தெரியாது… ஆனால் – நடிகர் தனுஷ் பேச்சு
Actor Dhanush Speech | பான் இந்திய மொழிகளில் பிசியான நாயகனாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் பள்ளிப் படிப்பை முடிக்கவில்லை என்றாலும் தான் படித்த பள்ளிக்கு சொந்த செலவில் கட்டடங்களை கட்டிக் கொடுத்து அதனை இன்று திறந்து வைத்து பேசியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் சினிமாவில் இதுவரை 54 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. தமிழ் மொழியில் நாயகனாக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து பான் இந்திய மொழிகள் மற்றும் ஆங்கில மொழியிலும் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் 55-வது படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதன்படி இந்தப் படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் நிலையில் இந்தப் படத்திற்கு ஓம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் தொடர்ந்து படப்பிடிப்பு பணிகளில் பிசியாக இருப்பது போல தனது சொந்த வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் இன்று தான் படித்த பள்ளி நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் கலந்துகொண்டு பேசினார். மேலும் இந்தப் பள்ளிக்கு நடிகர் தனுஷ் தனது சொந்த செலவில் கட்டிடங்களைக் கட்டிக் கொடுத்து அந்த கட்டட திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அந்த விழாவில் நடிகர் தனுஷ் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஸ்கூல் படிக்கும் போது எனக்கு இங்கிலீஸ் தெரியாது:
நான் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எனக்கு ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பத்து பேரில் எட்டு பேருக்குத் தமிழில் படிக்கவோ எழுதவோ தெரிவதில்ல.; இது வருத்தத்திற்குரிய விஷயம். பெல்ஜியத்தில் ஒரு பிரெஞ்சுத் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எனக்கு ஆங்கிலம் தெரியுமா என்று அவர்கள் கேட்டார்கள். நான் ‘தெரியும்’ என்று சொன்னேன். அதைக் கேட்டு அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அதற்கான காரணத்தைக் கேட்டபோது, ஒருவருக்குத் தன் தாய்மொழி தெரிந்திருக்க வேண்டும் அல்லவா? ஆங்கிலம் என்பது ஒரு கூடுதல் தகுதிதானே? என்று அவர்கள் கூறினார்கள். முதலில் தாய்மொழி தெரிந்திருக்க வேண்டும். “எனக்குத் தமிழ் தெரியாது என்று சொல்வது பெருமைக்குரிய விஷயமல்ல உண்மையில் அது வெட்கப்பட வேண்டிய ஒன்று என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… ரோலக்ஸ் படம் எப்போது தொடங்கும்? நடிகர் சூர்யா விளக்கம்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Dhanush‘s Latest Speech about Tamil:
• When I was studying, I didn’t know English very well. Now, it’s the opposite. Out of 10 people, 8 don’t know how to read or write in Tamil. That’s a sad thing.
• I worked on a French production in Belgium. They asked me whether I knew…
— Laxmi Kanth (@iammoviebuff007) August 5, 2026
Also Read… OM: அல்லாக்க லோவா பாடல் உருவானவிதம் இப்படிதான் – படக்குழு வெளியிட்ட வீடியோ!



