Ajith Kumar: ஒருவழியா வந்தாச்சு… அஜித் குமாரின் AK64 பட அப்டேட் வெளியானது!
Dare Devil Movie Update: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகனாகவும் கார் ரேஸராகவும் இருந்துவருபவர் அஜித் குமார். இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், AK64 படத்தில் இணைந்துள்ள நிலையில், தற்போது இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. அது குறித்து பார்க்கலாம்.
நடிகர் அஜித் குமார் (Ajith kumar) நடிப்பில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் உருவாகிவருகிறது. இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்த இடமானது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Director Adhik Ravichandran) இயக்கத்தில் கடந்த 2025ம் ஆண்டில் வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் நகைச்சுவையான கதைக்களத்தில் வெளியானது. இந்த படத்தில் அஜித் குமார் மற்றும் திரிஷா கிருஷ்ணன் இணைந்து நடித்திருந்தார். இந்த படமானது வெளியாகி சிறப்பான வெற்றியை பெற்ற நிலையில், மீண்டும் இணைந்துள்ளது.
அஜித் குமாரின் AK64 படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இயக்குநர் மட்டும் இதுவரை உறுதியான நிலையில், தற்போது இப்படத்தை தயாரிக்கும் நிறுவனம் என்ன என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அஜித்தின் AK64 படத்திற்கு “டேர் டெவில்” (Dare Devil) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தத்க்கது.
இதையும் படிங்க: இந்த வருஷம் என்னோட பர்த்டேவ கொண்டாடல.. ஆனால் – சூர்யா பகிர்ந்த விஷயம்!
அஜித் குமாரின் AK64 படத்தின் தயாரிப்பு நிறுவனம் குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவு :
#DareDevil – #AjithKumar #ShaliniAjithkumar #BraveHeartsProduction @Adhikravi @anirudhofficial @SureshChandraa @AbinandhanR @editorvijay @supremesundar #Subbhunaarayan @itsanuvardhan @kayoas13 @valentino_suren @Donechannel1 @AbdulNassarOffl @AMBANINSK#AK64 pic.twitter.com/ccUoL0Zltg
— Suresh Chandra (@SureshChandraa) August 3, 2026
சொந்த மனைவியின் தயாரிப்பில் நடிக்கும் அஜித் குமார்:
நடிகர் அஜித் குமார் தமிழில் குட் பேட் அக்லி படத்தில் இறுதியாக நடித்திருந்தார். இதையடுத்து தற்போது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் இணைந்துள்ளார். இந்த படத்தை அஜித் குமாரின் மனைவி ஷாலினி அஜித்குமார் தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்கு டேர் டெவில் என படக்குழு டைட்டில் வைத்துள்ளது. இப்படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைப்பாளராக பணியாற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வெளியானது ஜீவாவின் தகப்பன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
AK64 திரைப்படத்தின் ஷூட்டிங் எப்போது :
அஜித் குமாரின் இந்த படமானது அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. இப்படத்தில் அஜித் குமார் லீட் நாயகனாக நடிக்கும் நிலையில், அவருடன் முன்னணி நாயகியாக நடிக்கிறாராம். இப்படத்தில் அஜித் குமாருடன் ஸ்ரீலீலா, கயாடு லோஹர் மற்றும் ஸ்வாஸிகா போன்ற பிரபலங்கள் இணைந்து நடிக்கிறாராம். இந்த அறிவிப்பில் நடிகைகள் யார் என எந்த அறிவிப்புகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



