இந்த வருஷம் என்னோட பர்த்டேவ கொண்டாடல.. ஆனால் – சூர்யா பகிர்ந்த விஷயம்!
Suriya About Fans Dedication: தென்னிந்திய சினிமாவில் முன்னனணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் சூர்யா. இவரின் நடிப்பில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமானது விரைவில் வெளியாகும் நிலையில், சமீபத்தில் ஆடியோ லான்ச் நடைபெற்றது, அந்த நிகழ்ச்சியில் 2026ம் ஆண்டில் பிறந்தநாளை கொண்டாடாதது குறித்து தெரிவித்துள்ளார்.
கோலிவுட் சினிமாவில் லீட் நாயகனாக நடித்து மக்களை கவர்ந்துவருபவர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம் கருப்பு (Karuppu). இதை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) இயக்கியிருந்த நிலையில், கடந்த 2026ம் ஆண்டு மே மாதத்தில் உலகமெங்கும் வெளியானது. இந்த படமானது சூர்யாவுக்கு எதிர்பாராத வெற்றியை கொடுத்து, பிரம்மாண்டமான கம்பேக் படமாக அமைந்திருந்தது. இந்த படத்திற்கு பின் சூர்யா நடித்துவந்த திரைப்படம்தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath and sons). இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி (Venky Atluri) இயக்க, தயாரிப்பாளர் நாக வம்சி (Naga vamsi) தயாரித்துள்ளார்.
இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், அண்மையில் இசைவெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தகத்து. அந்த நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய சூர்யா, 2026ம் ஆண்டில் தனது பிறந்தநாளை கொண்டாடாவிட்டாலும், தனது ரசிகர்கள் தனக்காக செய்த விஷயம் குறித்து பேசியிருக்கிறார்.




இதையும் படிங்க: முன்பு சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க திட்டமிட்டேன் – இயக்குநர் ஜூட் ஆண்டனி
தனது ரசிகர்களில் அர்ப்பணிப்பு குறித்து வெளிப்படையாக பேசிய சூர்யா:
அந்த நிகழ்ச்சியின் மேடையில் பேசிய சூர்யா, “ஒரு காரணத்திற்காக இந்த வருடம் நான் என் பிறந்தநாளைக் கொண்டாடவில்லை. ஆனால் நீங்கள் செய்த அனைத்தையும் நான் உன்னிப்பாகக் கவனித்து வந்தேன். 5,000-க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்தனர், மேலும் 40,000-க்கும் மேற்பட்டோர் உங்கள் முயற்சிகளால் பயனடைந்தனர்.
இதையும் படிங்க: இந்தப் படத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு சஞ்சய் ராமசாமியைப் பார்ப்பீங்க – விஸ்வநாத் & சன்ஸ் பட தயாரிப்பாளர்
நீங்கள் குழந்தைகளை ஷாப்பிங்கிற்கு அழைத்துச் சென்று அவர்களுக்குப் புதிய ஆடைகளை வாங்கிக் கொடுத்தீர்கள். இந்த அன்புக்கும் கருணைக்கும் மிக்க நன்றி” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் குறித்து நடிகர் சூர்யா வெளியிட்ட எக்ஸ் பதிவு:
A first is always special – here’s the first single from #VishwanathandSons #Pattampoochi ▶️ https://t.co/u2b0TXiJbi #NenoButterfly ▶️ https://t.co/KbzGSTQePo
a @gvprakash musical 🎶
🎤 @Sublahshini
🖋️ @Arunrajakamaraj / @ramjowrites #VASonAUG14th #VenkyAtluri… pic.twitter.com/uMbeIlJilf— Suriya Sivakumar (@Suriya_offl) June 19, 2026
சூர்யாவின் இந்த படமானது மக்கள் மத்தியில் மிகவும் சிறப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. ரொம்ப நாட்களுக்கு பின் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள பேமிலி பொழுதுபோக்கு திரைப்படமாக விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் உருவாகியுள்ள நிலையில், திரியரங்குகளில் வெற்றிநடைப்போடும் என எதிர்பாக்கப்படுகிறது. கருப்பு படத்திற்கு பின் சூர்யாவுக்கு வெற்றி படமாக விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.