AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

செலிபிரேஷன் மாதம்.. புது புரோமோ வீடியோவை பகிர்ந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழு!

Vishwanath And Sons Movie Promo: தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களால் தி ஒன் என அழைக்கப்படும் நடிகர்தான் சூர்யா. இவரின் நடிப்பில் 2026ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக தயாராகியுள்ள திரைப்படம்தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக காத்திருக்கும் நிலையில், படக்குழு புரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

செலிபிரேஷன் மாதம்.. புது புரோமோ வீடியோவை பகிர்ந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழு!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 01 Aug 2026 19:27 PM IST

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் (Venky Atluri) இயக்கத்தில் நேரடி தமிழ் உருவாகியுள்ளதுதான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath And Sons). இதில் தி ஒன் சூர்யா (The One Suriya) லீட் ஆக்ஷன் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தில் சூர்யா 40 வயது கொண்ட தொழிலதிபராகவும், நடிகை மமிதா இளம் பெண்ணாகவும் நடித்துள்ளார். இவர்கள் இருவருக்குள்ளும் எவ்வாறு காதல் மலர்கிறது என்பது தொடர்பான கதைகளத்தில் இப்படமானது உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் (GV Prakash) இசையமைக்க, தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்துள்ளார். இந்த படமானது நேரடி தமிழ் படம் என்ற நிலையில், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. சூர்யாவின் இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியுள்ளது.

இன்று (01/08/2026) ஆகஸ்ட் மாதமானது தொடங்கியுள்ள நிலையில், இன்னும் 13 நாட்களில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், அது தொடர்பான ஸ்பெஷல் புரோமோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: சூப்பர் ஸ்டார் கொடுத்த ஆன்மிக புத்தகம்.. நெகிழ்ச்சியாக வீடியோவை பகிர்ந்த நடிகை ராஷி கண்ணா!

சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் ஸ்பெஷல் ப்ரோமோவை வெளியிட்ட படக்குழு:

சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட ஓடிடி ரிலீஸை கைப்பற்றிய நிறுவனம்:

இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவினா டாண்டன் மற்றும் பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் சூர்யா பிரபல தொழிலதிபர் சஞ்சய் விஸ்வநாத் என்ற வேடத்தில் நடித்துள்ளார். இவருக்கு அம்மாவாக நடிகை ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்தில் பூஜைகளுடன் தொடங்கிய நிலையில், சிறப்பாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்றுவந்தது.

இதையும் படிங்க: ஓம் படத்தின் ஷூட்டிங் நிலவரம் என்ன? இணையத்தில் வைரலாகும் தகவல்

இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனமானது பெற்றுள்ளது. கிட்டத்தட்ட ரூ 60 கோடிகளில் இப்படத்தின் டிஜிட்டல்; ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதாம்.மேலும் இப்படத்தின் சேட்டிலைட் ரிலீஸ் உரிமையை ஜீ தமிழ் தொலைக்காட்சி பெற்றுள்ளதாம். ஆக மொத்தத்தில் இப்படம் வெளியீட்டிற்கு முன்னே பாதி லாபத்தை பார்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us