ஓம் படத்தின் ஷூட்டிங் நிலவரம் என்ன? இணையத்தில் வைரலாகும் தகவல்
OM Movie Shooting Update Viral On Social Media | நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஓம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். இவர் நாயகனாக நடிக்கும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுவது போல இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஓம். இந்தப் படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான அமரன் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றதால் இந்தப் படத்தின் மீதும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தொடர்ந்து இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. படம் வெளியாக இன்னும் மூன்று மாத காலங்கள் உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி நடிகர் தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




ஓம் படத்தின் ஷூட்டிங் நிலவரம் என்ன?
இந்த நிலையில் படம் தொடர்பான தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது. அந்த வகையில் தனுஷின் ஓம் திரைப்படத்தின் படப்பிடிப்பின் இறுதிக்கட்டம் தற்போது திருவண்ணாமலையில் நடைபெற்று வருகிறது. முன்னதாக சென்னையில் உள்ள பிரபல மாலில் படப்பிடிப்பு நடைப்பெற்றது. நடிகர் மம்முட்டியின் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் அக்டோபர் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Also Read… கமல் ஹாசனின் புதுப் படத்தின் பணிகள் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
The final leg of the shooting for #Dhanush‘s #OM is currently underway in Tiruvannamalai. The film’s production is expected to be wrapped up very soon. OM is scheduled to hit theatres on October 16. pic.twitter.com/jQYgmU7o0o
— Movie Tamil (@_MovieTamil) August 1, 2026
Also Read… Sai Pallavi: தேவி சீதையாக சாய் பல்லவி.. ராமாயணா படத்தில் அவர் பெற்ற சம்பளம் இத்தனை கோடியா?