AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தென்னிந்திய சினிமாவில் இன்று ஓடிடியில் வெளியான படங்களின் லிஸ்ட் இதோ

Here is the list of movies released on OTT today | தென்னிந்திய மொழிகளில் இந்த வாரம் ஓடிடியில் பல முக்கியமான படங்கள் வெளியாகி உள்ளது. அது என்னென்ன என்பது குறித்து தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய சினிமாவில் இன்று ஓடிடியில் வெளியான படங்களின் லிஸ்ட் இதோ
படங்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 31 Jul 2026 09:30 AM IST

கட்டா குஸ்தி 2 படம்: தமிழ் சினிமாவில் ஸ்போர்ஸ்ட் ட்ராமா காமெடி பாணியில் உருவாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் கட்டா குஸ்தி 2 படம். இந்தப் படத்தினை இயக்குநர் செல்ல அய்யாவு எழுதி இயக்கி இருந்தார். நடிகர் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து இருந்த இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நாயகியாக நடித்து இருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் கடந்த ஜூலை மாதம் 03-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற இந்த கட்டா குஸ்தி 2 படம் இன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

பாலன் தி பாய் படம்: மலையாள சினிமாவில் கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் பாலன் தி பாய். சைக்காலஜி திரில்லர் பானியில் உருவான இந்தப் படத்தை இயக்குநர் சிதம்பரம் இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தின் திரைக்கதையை இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது. படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர்கள் ஆதிசேஷன் கே.ஆர்., ஃபர்சானா பாலதிங்கல், முஹம்மது ஜினான், டொவினோ தாமஸ், கிரிஷ் ஏ. டி. மற்றும் ஜீன் பால் லால் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர் . இந்த நிலையில் இந்தப் படம் இன்று ஜீ 5 ஓடிடியில் வெளியாகி உள்ளது.

Also Read… இது ராமயுகத்தின் உதயம்… அதிகாலையிலேயே வெளியானது ராமாயணா படத்தின் ட்ரெய்லர்

லவ் ஓ லவ் படம்: நடிகர் பவிஷ் கே நாராயண் நாயகனாக நடித்து கடந்த ஜூலை மாதம் 10-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் லவ் ஓ லவ். ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவான இந்தப் படத்தை இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கி இருந்தார். திரையரங்குகளில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த இந்தப் படம் இன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி உள்ளது.

Also Read… ப்ரீ புரடெக்‌ஷனில் தீவிரம் காட்டும் மாவீரன் 2 படக்குழு? வைரலாகும் தகவல்

Follow Us