AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் சூர்யா இப்படிதான் இருப்பார் – இயக்குநர் வெங்கி அட்லூரி

Director Venky Atluri talks about Vishwanath And Sons movie | தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி சமீபத்தில் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் சூர்யா இப்படிதான் இருப்பார் – இயக்குநர் வெங்கி அட்லூரி
விஸ்வநாத் அண்ட் சன்ஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Jul 2026 11:22 AM IST

தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வரும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படத்தை தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வரும் இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான படங்கள் மாபெரும் வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்து உள்ளார். தென்னிந்திய சினிமாவில் தற்போது பிசியான நாயகியாக வலம் வரும் நடிகை மமிதா பைஜுவின் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் மூன்றாவதாக இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக வரிசையாக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தில் இவரகளுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து உள்ள நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் சூர்யா இப்படிதான் இருப்பார்:

இந்த நிலையில் படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரியும் தொடர்ந்து பேட்டிகளை அளித்து வருகிறார். அதில் இந்தப் படம் குறித்து அவர் பேசியதாவது, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தில் சூர்யாவின் குடும்பத் தலைவன் எனும் பரிமாணத்தை நான் வெளிப்படுத்தியுள்ளேன். இப்படத்தில் அவரது கதாபாத்திரம் ‘கஜினி’ படத்தின் ஃபிளாஷ்பேக் காட்சிகளில் வருவது போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும். இது 42 வயதுடைய ஒரு ஆணுக்கும் 22 வயதுடைய ஒரு பெண்ணுக்கும் இடையிலான உறவு குறித்த கதை. இதில் கதாநாயகன் சரியான ஒழுக்கநெறிகளைக் கொண்டவராக இருப்பார். துப்பாக்கி சுடுதல் என்பது படத்தின் ஒரு கூடுதல் அம்சம் மட்டுமே சஞ்சய் விஸ்வநாத் (சூர்யா) மற்றும் மேடி (மமிதா பைஜு) ஆகியோருக்கு இடையிலான உறவுதான் படத்தின் மையக்கரு என்று வெங்கி அட்லூரி தெரிவித்துள்ளார்.

Also Read… ஷீ இஸ் மை செல்லகுட்டி… இம்மார்டல் படலத்திலிருந்து வெளியானது இரண்டாவது சிங்கிள்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சிங்கம் பெற்ற பிள்ளை என்று ஊரே சொல்லும் ஓசையோடு… மகன் துல்கர் சல்மானுக்கு பிறந்த நாள் வாழ்த்தை வெளியிட்ட மம்முட்டி

Follow Us