AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்திய சினிமாவில் மிஸ்டர் ஐஸ் சூர்யா சாரின் கண்கள் – இயக்குநர் வெங்கி அட்லூரி

Director Venky Atluri talks about Suriya Eyes | தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் வெங்கி அட்லூரி. இவரது இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படம் குறித்தும் நடிகர்கள் குறித்தும் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இந்திய சினிமாவில் மிஸ்டர் ஐஸ் சூர்யா சாரின் கண்கள் – இயக்குநர் வெங்கி அட்லூரி
நடிகர் சூர்யா - இயக்குநர் வெங்கி அட்லூரிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Jul 2026 20:17 PM IST

தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் வெங்கி அட்லூரி. இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேறைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து இவர் தெலுங்கு சினிமாவில் அதிக அளவில் படங்களை இயக்கி வந்த நிலையில் தமிழ் சினிமாவில் வாத்தி என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தார். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து இருந்தார். படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கி உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து உள்ளார்.

நடிகர் சூர்யாவின் நடிப்பில் 46-வது படமாக இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் உருவாகி உள்ளது. படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வரும் நிலையில் இயக்குநர் வெங்கி அட்லூரி அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்திய சினிமாவில் மிஸ்டர் ஐஸ் சூர்யா சாரின் கண்கள்:

சூர்யா சாரின் கண்கள் இந்திய சினிமாவின் மிஸ்டர் ஐ கண்கள். விஸ்வநாத் அண்ட் சன்ஸ். ஒரு திரைப்பட விளம்பரத்தின் போது, ​​சூர்யா சார் சன்கிளாஸ் அணிந்து உள்ளே வந்தார். கூட்டம் உடனடியாக, கண்ணாடியைக் கழற்றுங்கள் என்று கோஷமிடத் தொடங்கியது. அவர்கள் சூர்யா சாரின் கண்களைப் பார்க்க மட்டுமே விரும்பினார்கள். அவர் கண்ணாடியைக் கழற்றிய அந்த நொடியில், அரங்கம் முழுவதும் ஆர்ப்பரித்தது. அதுதான் ‘தி ஒன்’-இன் ஈடு இணையற்ற வசீகரம் என்று இயக்குநர் வெங்கி அட்லூரி தெரிவித்தது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… அஜித் குமாரின் 64-வது படத்தின் மொத்த பட்ஜெட் இதுவா? வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… காமெடி த்ரில்லர் பிடிக்குமா? அப்போது இன்ஸ்பெக்டர் ஜெண்டே படத்தை கண்டிப்பா பாருங்க!

Follow Us