நான் அந்த சூழலில் இருந்திருந்தால்… வைரலாகும் அம்பிகாவின் பேச்சு
Actress Ambika recent interview | தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகையாக வலம் வருபவர் நடிகை அம்பிகா. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தளபவி விஜய் மற்றும் த்ரிஷாவின் நட்பு குறித்து பேசியுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தென்னிந்திய சினிமாவில் பழம்பெரும் நடிகையாக வலம் வருகிறார் நடிகை அம்பிகா. இவர் கடந்த 1976-ம் ஆண்டு முதல் தனது நடிப்பு பயணத்தை மலையாள சினிமாவில் தொடர்ங்கினார். தொடர்ந்து மலையாள சினிமாவில் படங்களில் நடித்து வந்த நடிகை அம்பிகா பிறகு தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் நடிக்கத் தொடங்கினார். அதன்படி தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார். அதன்படி தமிழ் சினிமாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் என பலருடன் இணைந்து நடிகர்கள் பலர் உடன் இணைந்து நாயகியாக நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சினிமாவில் நாயகியகா நடித்த இவர் பிறகு அக்கா, அண்ணி மற்றும் அம்மா வேடங்களை ஏற்று நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிறகு சின்னத்திரையில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் நடிகை அம்பிகா சீரியல்களிலும் தொடர்ந்து முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை அம்பிகா சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகரும் முதலமைச்சருமான தளபதி விஜய் மற்றும் த்ரிஷாவின் நட்பு குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




தளபதி விஜய் மற்றும் த்ரிஷாவின் நட்பு குறித்து பேசிய அம்பிகா:
திரைத்துறையில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் இப்போது ஒரு மிக முக்கியமான பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருடன் நான் சேர்ந்து காணப்படுவது அல்லது அவருடன் செல்வது அவருக்கு ஏதேனும் எதிர்மறையான பிம்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்றால், நான் அங்கு செல்லமாட்டேன்.
நாங்கள் எவ்வளவு நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் சரி, ஒரு விஷயத்தால் மற்றவர்கள் சங்கடத்தையோ அல்லது மனவேதனையையோ அடைந்தால், அவர்களின் உணர்வுகளை நாம் மதிக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அத்தகைய சூழலில் நான் விலகி நின்று, அந்த நட்புக்குரிய மரியாதையை அளிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சமீபத்தில் அஜித் குமாரின் கார் ரேஸில் விஜய் உடன் த்ரிஷாவும் கலந்து கொண்டது குறித்து அம்பிகா இப்படி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Jason Sanjay: என்னோட ரியாக்ஷனா? விஜய் முதல்வரானது குறித்து தனது மன நிலை பற்றி பேசிய ஜேசன் சஞ்சய்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
“If I Were in That Situation, I Wouldn’t Have Gone.” – Actress Ambika.
“I have a friend in the film industry. Let’s say he has now taken up a very important position. If my being seen with him or accompanying him could create a negative impression for my friend, I wouldn’t go.… pic.twitter.com/MRFz8JOjic
— FilmyBowl Tamil (@FilmyBowlTamil) September 15, 2026
Also Read… Dare Devil: தல ரசிகர்களே ரெடியா..! டேர் டெவில் பட ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது தெரியுமா?