AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சந்தீப் கிஷன் – ஜேசன் சஞ்சயின் சிக்மா பட ட்ரெய்லர் மற்றும் ஆடியோ லான்ச் அப்டேட் கொடுத்த படக்குழு!

Sigma Movie Trailer And Audio Launch: இளம் இயக்குநரான ஜேசன் சஞ்சயின் இயக்கத்தில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம்தான் சிக்மா. இப்படம் 2026ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், இதன் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி குறித்து அப்டேட்டை படகுலகு வெளியிட்டுள்ளது.

சந்தீப் கிஷன் – ஜேசன் சஞ்சயின் சிக்மா பட ட்ரெய்லர் மற்றும் ஆடியோ லான்ச் அப்டேட் கொடுத்த படக்குழு!
சிக்மா திரைப்பட டிரெய்லர் மற்றும் ஆடியோ லான்ச்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 16 Sep 2026 21:44 PM IST

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகராக இருந்துவருபவர் சந்தீப் கிஷன் (Sundeep Kishan). இவர் இறுதியாக தமிழில் தனுஷின் (Dhanush) ராயன் (Raayan) திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படமானது இவருக்கு தமிழில் சிறப்பான வரவேற்பை கொடுத்தது. இதற்கு பின் இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளதுதான் சிக்மா (Sigma). இதை முதல்வர் விஜய்யின் (CM Vijay) மகன் ஜேசன் சஞ்சய் (Jason Sanjay) இயக்க, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். இந்த படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை ஃபரியா அப்துல்லா நடித்துள்ளார். இப்படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் காதல் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் ஜேசன் சஞ்சயும் முக்கியமாக ஒரு வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் 2026ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. அதை முன்னிட்டு இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ லான்ச் எப்போது என்பது குறித்த தகவலை படக்குழு பகிர்ந்துள்ளது.

இதையும் படிங்க: ஒரு கத சொல்லட்டுமா… தங்களின் சொந்த வாழ்க்கை கதையை சொன்ன போட்டியாளர்கள் – வைரலாகும் பிக் பாஸ் புரோமோ!

சிக்மா திரைப்படத்தின் ஆடியோ லான்ச் மற்றும் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

சிக்மா படத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியானது நடைபெற்றிருந்த நிலையில், இது தொடர்பான பேச்சுக்கள் மற்றும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகிவந்தது. அதை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ லான்ச் எப்போது என படக்குழு அறிவித்துள்ளது. ஜேசன் சஞ்சயின் சிக்மா படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ லான்ச் வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியானது சென்னையில் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: என்னோட ரியாக்ஷனா? விஜய் முதல்வரானது குறித்து தனது மன நிலை பற்றி பேசிய ஜேசன் சஞ்சய்!

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்துள்ள நிலையில், இதுவரை மொத்தமாக 3 பாடல்கள் வெளியாகியுள்ளது. இந்த படமானது சிறப்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கிய நிலையில், புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us