Jason Sanjay: என்னோட ரியாக்ஷனா? விஜய் முதல்வரானது குறித்து தனது மன நிலை பற்றி பேசிய ஜேசன் சஞ்சய்!
Jason Sanjay About CM Vijay: தமிழ் சினிமாவில் இளம் இயக்குநராக நுழைந்திருப்பவர் முதல்வர் விஜய். இவர் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியுள்ள புதிய திரைப்படம்தான் சிக்மா. சமீபத்தில் தெலுங்கு ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியின்போது பேசிய ஜேசன் சஞ்சய், முதல்வரும், தனது தந்தையுமான விஜய் பற்றி பேசியிருந்தார்.
தமிழக முதல்வர் விஜய்யின் (CM Vijay) மகனும், சினிமாவில் இயக்குநராக நுழைந்திருப்பவர் ஜேசன் சஞ்சய் (c). இவர் சினிமாவில் இயக்குநராக நுழைந்துள்ள புதிய திரைப்படம்தான் ஜேசன் சஞ்சய். இவர் சினிமாவில் ஆரம்பத்தில் சிறுவயதில் வேட்டைக்காரன் படத்தில் பாட்டு ஒன்றில் நடனமாடியிருந்த நிலையில், அதன் பிறகு சினிமாவில் எந்த படங்களிலும் பணியாற்றவில்லை. ஆனால் தனது தந்தையும், தமிழக முதல்வருமான விஜய்யின் படத்தின் ஷூட்டிங் நடக்கும் பகுதிகளில் சென்று பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார். அதிலிருந்து படங்களில் இயக்குவது மற்றும் கதைகளை எழுதுவதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். அதன் பிறகு தனது பள்ளிப் படிப்பை முடித்த நிலையில், வெளிநாட்டில் சென்று தனது சினிமா படிப்பையும் தொடர்ந்தார். இதையெல்லாம் முடித்த ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள முதல் திரைப்படம்தான் சிக்மா (Sigma).
இதில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக இயக்க, சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதியில் வெளியாக காத்திருக்கும் நிலையில், அதை முன்னிட்டு சமீபத்தில் தெலுங்கு செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அதில் பேசிய ஜேசன் சஞ்சய், தனது தந்தை முதல்வரான தருணம் குறித்து பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: மலையாள பிக்பாஸில் நடந்த அந்த விசயம் தமிழ் பிக்பாஸில் நடக்குமா? என்ன விசயம் தெரியுமா
தனது கந்தை விஜய் முதல்வரானது குறித்து வெளிப்படையாக பேசிய ஜேசன் சஞ்சய்:
அந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஜேசன் சஞ்சயிடம், செய்தியாளர் ஒருவர், உங்கள் தந்தை முதல்வரானபோது உங்களின் ரியாக்ஷன் எப்படி இருந்தது? என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த ஜேசன் சஞ்சய், “என் தந்தை முதலமைச்சரானபோது நான் மகிழ்ச்சியடைந்தேன். அது அவரைச் சுற்றியிருந்த அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான தருணமாக இருந்தது” என அதில் அவர் தெரிவித்திருந்தார். அதில் ஜேசன் சஞ்சய், தனது தந்தையை பற்றி பேசும்போது மேடையிலிருந்து, அங்கிருந்த ரசிகர்கள் கூச்சலிட்டனர்.
இதையும் படிங்க: எல்லம்மா படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு ஜோடியாகும் பிரபல நடிகை? அட இவரா?
தனது தந்தை விஜய் குறித்து குறித்து ஜேசன் சஞ்சு பேசியது தொடர்பான வீடியோ:
“I felt happy when my father (#ThalapathyVijay) became CM (#CMVijay). It was a happy moment for everyone around him.”
– #JasonSanjay pic.twitter.com/3hASCjiJsg
— Movies Singapore (@MoviesSingapore) September 16, 2026
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த சிக்மா படமானது சிறப்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாம். இதில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ஃபரியா அப்துல்லா நடித்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் தமன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.