AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஓடிடியில் வெளியாகி உள்ள விஸ்வநாத் & சன்ஸ் படத்தை கொண்டாடும் ரசிகர்கள்!

Vishwanath And Sons Movie OTT Review | நடிகர் சூர்யாவின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றது.

ஓடிடியில் வெளியாகி உள்ள விஸ்வநாத் & சன்ஸ் படத்தை கொண்டாடும் ரசிகர்கள்!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Sep 2026 12:25 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் இதுவரை இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியான நிலையில் அடுத்ததாக வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 46-வது படமான சீன் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். இந்த நிலையில் முன்னதாக வெளியான கருப்பு மற்றும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என இரண்டு படங்களுமே மாபெரும் வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து மூன்றாவதாக வெளியாக உள்ள சீன் படமும் வெற்றியடைந்தால் சூர்யாவிற்கு ஹாட்ரிக் வெற்றியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கி உள்ள இந்தப் படம் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் உலக அளவில் ரூபாய் 250 கோடிகளுக்கு மேல் வசூலித்ஹது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓடிடியில் வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தை கொண்டாடும் ரசிகர்கள்:

தமிழ் நாட்டில் பெரிய பிசினஸ் மேனாக வலம் வரும் நடிகர் சூர்யா 40 வயதைக் கடந்தும் திருமணம் செய்யாமல் இருக்கிறார். அவரது அம்மா ராதிகா இந்த வீட்டிற்கு வாரிசு வேண்டும் திருமணம் செய் என்று சொல்ல வாரிசுதான அதற்கு எதற்கு திருமணம் என்று சரகேசி முறையில் குழந்தையை பெற்று வீட்டிற்கு அழைத்து வருகிறார்.

Also Read… கலேபரமாக இருக்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 வீடு… சண்டைக்கு பஞ்சமே இல்லை – வைரலாகும் வீடியோ

இப்படி இருக்கும் நிலையில் குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு போன்மேரோ ட்ரான்ஸ்ப்ளாண்ட் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதற்கு குழந்தையின் பெற்றோர்களே மேட்சாக இருப்பார்கள். அதில் சூர்யாவின் போன்மேரோ மேட்ச்சாகத நிலையில் அம்மாவின் போன்மேரோ தேவைப்படுவதால் சரகேசி மதரை தேடி செல்கிறார்கள். அப்படி செல்லும் போதுதான் அது மமிதா பைஜூ என்று தெரிகிறது. அதனைத் தொடர்ந்து என்ன எல்லாம் நடந்தது என்பதே படத்தின் கதை.

இந்தப் படம் கடந்த 11-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியான இந்தப் படத்தை தற்போது ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். மேலும் ஓடிடியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம்.

Also Read… உலக அளவில் ரூபாய் 65 கோடிகளை வசூலித்தது மண்டாட்டி – கொண்டாடும் படக்குழு

Follow Us