AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கலேபரமாக இருக்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 வீடு… சண்டைக்கு பஞ்சமே இல்லை – வைரலாகும் வீடியோ

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தொடர்ந்து போட்டியாளர்களிடையே பிரச்சனைகளும் நடைப்பெற்றுக்கொண்டே இருக்கின்றது. கடந்த வாரம் குறிப்பிட்ட சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்கலும் சண்டையிட்டுக்கொண்டே இருக்கின்றனர்.

கலேபரமாக இருக்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 வீடு… சண்டைக்கு பஞ்சமே இல்லை – வைரலாகும் வீடியோ
பிக்பாஸ் தமிழ் சீசன் 10Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Sep 2026 13:02 PM IST

தமிழ் சின்னத்திரையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 06-ம் தேதி 2026-ம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கியது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து மக்களிடையே நிகழ்ச்சியின் மீதான ஈர்ப்பு அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மொத்தம் 19 போட்டியாளர்கள் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதில் வீட்டில் இருந்து கடந்த வாரம் போட்டியாளர் ப்ளாக் பாண்டி உடல் நலக் குறைவு காரணமாக வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து நாமினேசனில் இருந்த சாவன்ய வேலு மற்றப் போட்டியாளர்களின் தேர்வில் வெளியேற்றப்பட்டார். இது பிக்பாஸ் தமிழ் வரலாற்றிலேயே நடைபெறாத ஒன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து வார இறுதியில் தொகுப்பாளர் விஜய் சேதுபதி யாரையும் வெளியேற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் மணிவண்ணன் வைல்கார்ட் போட்டியாளராக உள்ளே வந்தார். இவர் ப்ளாக் பாண்டி வெளியேறியததற்காக உள்ளே அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இந்த வாரம் தற்போது நடிகை ஆனந்தி அஜய் வைல்கார்ட் போட்டியாளராக நுழைந்தார். இந்த நிலையில் தொடர்ந்து பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் புரோமோ வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

கலேபரமாக இருக்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 வீடு:

அந்த வகையில் இன்று பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் 9-வது நாளிற்கான இரண்டாவது புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அந்த புரோமோ வீடியோவில் இந்த வாரம் வீட்டின் லீடராக உள்ள ஷமா மற்றும் போட்டியாளர் அவினாஷ் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு டாஸ்கில் லீடரின் முடிவை எதிர்த்து அவினாஷ் அவரிடையே சண்டையிடுவது போல அந்த வீடியோவில் தெரிகின்றது. மேலும் இந்த நிகழ்வு என்ன என்பது குறித்து நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போதே தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த முதல் நாளே அழுகையா… வைரலாகும் நடிகை ஆனந்தியின் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… நடிகை பார்வதியின் பிரதம திருஷ்டிய குட்டக்கர் படத்தை கொண்டாடும் ரசிகர்கள்

Follow Us