அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் புதுப் படத்தின் டைட்டில் இதுதான்
Dhruv Vikrams Jackie Movie First Look Poster | நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் தற்போது 4-வதாக உருவாகி வரும் படத்தை ஒரு அறிமுக இயக்குநர் இயக்கி வருகிறார். இந்த நிலையில் அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போது உள்ள பெரும்பான்மையான நடிகர்கள் வாரிசு நடிகர்களாக சினிமாவில் என்ட்ரி கொடுத்து இருந்தாலும் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து தற்போது சினிமாவில் தங்களுக்கு என்று ஒரு இடத்தை தக்கவைத்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது துருவ் விக்ரமும் இடம்பிடித்துள்ளார். அதன்படி நடிகர் துருவ் விக்ரம் நடிகர் விக்ரமின் மகனாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இவர் அறிமுகம் ஆன முதல் படத்தில் இருந்தே ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றார். அதிலும் குறிப்பாக நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் பைசன் காளமாடன். கபடியை மையமாக வைத்து உருவான இந்தப் படம் ஒரு கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக அமைந்து இருந்தது. மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியகா மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் துருவ் விக்ரமிற்கு அடுத்தடுத்தப் படங்கள் வரிசைக்கட்டி வருகின்றது. அந்த வகையில் தற்போது துருவ் விக்ரம் இரண்டு படங்களில் ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறார். அதில் ஒன்று தான் அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது. இந்தப் படம் அந்த தயாரிப்பு நிறுவனத்திற்கும் சரி நடிகர் துருவ் விக்ரமிற்கும் சரி 4-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.




துருவ் விக்ரம் நடிக்கும் புதுப் படத்தின் டைட்டில் இதுதான்:
இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து தொடர்ந்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. மேலும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்தப் படத்திற்கு தற்போது ஜாக்கி என்று பெயர் வைத்துள்ளனர். அந்தப் போஸ்டரைப் பார்க்கும் போது இது ஒரு ஆக்ஷன் படமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஜாக்கி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Dhruv is J✭CKIE ❤🔥#Jackie – No Retakes Allowed, will be an out and out commercial entertainer, it’s a promise. 💥💥
Directed by @karanAkumar12
A @Music_Santhosh musical 🎼
Produced by @MythriOfficial@WriterSaby @viki_dop @chiya_1009 @PraveenRaja_Off #GMSekhar @vm_mor… pic.twitter.com/Cj5qpWET5C
— Mythri Movie Makers (@MythriOfficial) September 13, 2026
Also Read… தலைவர் எப்படி இருக்க வேண்டும்? பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியது வைரலாகி வருகின்றது