AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

துருவ் விக்ரமின் 4வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது? – வெளியான அப்டேட் இதோ!

DV04 Movie First Look: தமிழில் இளம் நடிகராக ரசிகர்களை தனது நடிப்பின் மூலமாக கலவர்ந்துவருபவர் துருவ் விக்ரம்.இவர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் கீழ் புதிய படத்தில் நடிகராக இணைந்துள்ளார். அதிரடி காதல் கதையில் இப்படம் உருவாக்கப்பட்டுவரும் நிலையில், இப்படத்தின் முதல் பார்வை ரிலீஸ் குறித்து படக்குழு அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

துருவ் விக்ரமின் 4வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது? – வெளியான அப்டேட் இதோ!
துருவ் விக்ரமின் 4வது படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 12 Sep 2026 15:22 PM IST

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சியான் விக்ரம் (Chiyaan Vikram). இவரின் ஒரே மகன்தான் நடிகர் துருவ் விக்ரம் (Dhruv Vikram) . தனது தந்தையை போலவே சினிமாவின் மீது ஆர்வம் கொண்ட துருவ் விக்ரம், தமிழ் மொழியில் படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலமாக இவர் ஹீரோவாக நுழைந்த நிலையில், இந்த திரைப்படமானது இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பின், மகான், வர்மா மற்றும் பைசன் போன்ற திரைப்படங்களிலும் நாயகனாக நடித்திருந்தார். அதில் இவருக்கு ஒரு கதாநாயகனாக மிகவும் பிரம்மாண்ட வரவேற்பை கொடுத்த திரைப்படம்தான் பைசன் (Bison). இதை மாரி செல்வராஜ் (Mari Selvaraj) இயக்கியிருந்த நிலையில், கடந்த 2025ம் ஆண்டு தீபாவளியில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தின் வெற்றிக்கு பின், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் துருவ் விக்ரம் இணைந்த புதிய படம்தான் DV04. இந்த படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே தொடங்கி சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இதன் முதல் பார்வை ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: அன் ஆர்டினரி மேன் படத்தின் ஹையர் புரோமோ பாடல் 5 மில்லியன் பார்வைகளைக் கடந்தது

துருவ் விக்ரமின் DV04 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்:

நடிகர் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் 4வது படம்தான் தற்காலிகமாக DV04 என அழைக்கப்பட்டுவருகிறது. இதை இயக்குனர் கரண் அரவிந்த் குமார் இயக்க, அதில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இயக்குநர் கரண் அரவிந்த் குமார், ஏற்கனவே துருவ் விக்ரமின் ஆதித்ய வர்மா படத்தில் எழுத்தாளராக பணியாற்றியிருந்தாராம். அந்த விதத்தில் மீண்டும் இந்த கூட்டணி ஒரு புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளது. இப்படத்தின் முதல் பார்வை நாளை (13/09/2026) வெளியாகிறதாம். அந்த விதத்தில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகிவருகிறது.

இதையும் படிங்க: லண்டனில் கூடிய ரசிகர்கள்… அஜித் குமார் விடுத்த அன்பான வேண்டுகோள் – வைரலாகும் வீடியோ

துருவ் விக்ரமின் DV04 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட அப்டேட் பதிவு:

இப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக எந்த நடிகை நடிக்கிறார் என்ற அப்டேட் இன்னும் வெளியாகவில்லை. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் நிலையில், இப்படத்தின் பாடல்களும் சிறப்பாக உருவாக்கப்பட்டுவருகிறதாம். இப்படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us