AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

எல்லாம் தெரிஞ்சவன் தலைவனாவது அந்த காலம்… எல்லாருக்கும் தெரிஞ்சவன் தலைவனாவது இந்த காலம் – வெளியானது ப்ளடி பாலிடிக்ஸ் படத்தின் டீசர்

Bloody Politics Movie Official Teaser | தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் கௌதம் ராம் கார்த்திக். இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள ப்ளடி பாலிடிக்ஸ் படத்தின் டீசரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

எல்லாம் தெரிஞ்சவன் தலைவனாவது அந்த காலம்… எல்லாருக்கும் தெரிஞ்சவன் தலைவனாவது இந்த காலம் – வெளியானது ப்ளடி பாலிடிக்ஸ் படத்தின் டீசர்
ப்ளடி பாலிடிக்ஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Sep 2026 11:52 AM IST

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர் முத்துராமனின் பேரனாகவும் நடிகர் கார்த்திக்கின் மகனாகவும் அறிமுகம் ஆனார் நடிகர் கௌதம் ராம் கார்த்திக். இவர் சினிமாவில் நடிகராக நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் தொடர்ந்து சாதிய பெருமை பேசும் படங்களில் நடித்து வந்தார். இதன் காரணமாகவே இவரது நடிப்பில் வெளியான படங்கள் பலதரப்பட்ட மக்களிடையே வரவேற்பைப் பெற தவறியது. மேலும் இதுகுறித்து இயக்குநர் கௌதம் ராம் கார்த்திக் முந்தைய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசி இருந்தார். அந்தப் பேட்டில் தான் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் அந்த மாதிரியான படங்களை தேர்வு செய்தது சினிமா வாழ்க்கையில் செய்த தவறான முடிவு என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் சமீப காலமாக நடிகர் கௌதம் ராம் கார்த்திக் தெர்வு செய்யும் கதாப்பாத்திரங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இந்த நிலையில் நடிகர் கௌதம் ராம் கார்த்திக் நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ப்ளடி பாலிடிக்ஸ். இந்தப் படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி தற்போது வெளியிட்டுள்ளா. அந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வெளியானது கௌதம் ராம் கார்த்திக் ப்ளடி பாலிடிக்ஸ் படத்தின் டீசர்:

இயக்குநர் தின ராகவன் இந்த ப்ளடி பாலிடிக்ஸ் படத்தின் கதையை எழுதி இயக்கி உள்ளர். மேலும் இந்தப் படத்தில் கௌதம் ராம் கார்த்திக் உடன் இணைந்து நடிகர்கள் செல்வராகவன், பி வாசு, அஞ்சனா நேத்ருன், ராபி, ஏ. வெங்கடேஷ், லெனின் பாரதி, லொள்ளுசபா மாறன், பாக்கியம் சங்கர், ஆதித்ய கதிர் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த ப்ளடி பாலிடிக்ஸ் என்ற படத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த நாயகன் அரசியல்வாதியாக நினைக்கிறான். அதற்காக அவன் என்ன எல்லாம் செய்கிறான் என்பதே படத்தின் கதை என்பது டீசரைப் பார்க்கையில் தெரிகின்றது. மேலும் விரைவில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும்.

Also Read… விஜய் சேதுபதியின் பத்தா படத்திலிருந்து வெளியானது மகளே பாடல்!

நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸ் வீட்டில் கேப்டன் போட்ட சட்டத்தால் சிறையில் அடைக்கப்பட்ட முனியம்மா – வைரலாகும் வீடியோ

Follow Us