AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

விஜய் சேதுபதியின் பத்தா படத்திலிருந்து வெளியானது மகளே பாடல்!

Magale Music Video From Baththa Movie | நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து படங்கள் விறுவிறுப்பாக உருவாகி வருகின்றது. இந்த நிலையில் பத்தா படத்தில் இருந்து பாடல் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விஜய் சேதுபதியின் பத்தா படத்திலிருந்து வெளியானது மகளே பாடல்!
மகளே பாடல்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Sep 2026 13:06 PM IST

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் தென்னிந்திய சினிமவில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் தற்போது உருவாகி திரையரங்குகளில் வெளியாக உள்ள படங்களின் பட்டியல் நீளம். அதன்படி நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தென்னிந்திய மொழிகளில் பத்தா, ஜெயிலர் 2, ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட், அரசன், பாக்கெட் நாவெல் மற்றும் இஞ்சி வெல்லம் ஆகியப் படங்கள் விறுவிறுப்பாக உருவாகி வருகின்றது. இந்த ஆண்டில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக உள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் பத்தா படத்தில் இருந்து தொடர்ந்து அப்டேட் வெளியாகி வருகின்றது.

அந்த வகையில் தற்போது படத்தில் இருந்து முதல் சிங்கிள் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் பாலாஜி தரணிதரன் எழுதி இயக்கி உள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நடுவுள கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் பாலாஜி தரணிதரன். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சீதாக்காதி என்ற படத்தையும் விஜய் சேதுபதி வைத்தே எடுத்தார்.

விஜய் சேதுபதியின் பத்தா படத்திலிருந்து வெளியானது மகளே பாடல்:

இந்த நிலையில் தற்போது இந்த பத்தா படத்திற்காக விஜய் சேதுபதி மற்றும் பாலாஜி தரணிதரன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படத்தில் நடிகை லிஜோ மோல் ஜோஷ் உட்பட நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைத்து வரும் நிலையில் படத்தில் படத்தில் இருந்து மகளே என்ற பாடல் வீடியோ வெளியாகி உள்ளது. மேலும் இந்தப் பாடலை சாய் அபயங்கர் அவரது அம்மா பாடகி ஹரினி உடன் இணைந்து பாடியுள்ளார். இந்தப் பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… சர்தார் 2 முதல் மண்டாட்டி வரை… தென்னிந்திய மொழிகளில் இந்த வாரம் வெளியாகும் முக்கிய நடிகர்களின் படங்கள் லிஸ்ட் இதோ!

நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தீபாவளிக்கு சீன்னா வரோம்… வெளியானது சூர்யாவின் சீன் படத்தின் டைட்டில் டீசர்

Follow Us