விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனாவின் ரணபாலி பட டீசர் ரிலீஸ் தேதி எப்போது? வெளியான அறிவிப்பு இதோ!
Ranabaali Teaser Update: தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா இருவரும் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படம்தான் ரணபாலி. இப்படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக வளர்ந்துவருபவர் விஜய் தேவரகொண்டா (Vijay Deverakonda). இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் படங்கள் வெளியாகியிருக்கிறது. இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம் கிங்டம் (Kingdom). கடந்த 2025ம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியாகியிருந்த இப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்திற்கு பின், தெலுங்கு இயக்குநர் ராகுல் சங்கிருத்யான் (Rahul Sankrityan) இயக்கத்தில் இணைந்திருந்த புத்தம் புது மற்றும் வரலாற்று திரைப்படம்தான் ரணபாலி (Ranabaali). இதில் விஜய் தேவரகொண்டா மிகவும் சிறப்பான வேடத்தில் நடித்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) நடித்துள்ளார். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பின் இப்படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர்.
இப்படம் வரலாற்றுப் பின்னணி கதையில் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், மிகவும் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருகிறது. இப்படம் 2026ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியாக தயாராகிவரும் நிலையில், இதன் டீசர் ரிலீஸ் குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: அவர் சொன்னதைச் செய்பவர்.. முதல்வர் விஜய் கற்றுத்தந்த பாடம் குறித்து பேசிய மாளவிகா மோகனன்!
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகாவின் ரணபாலி பட டீசர் ரிலீஸ் அப்டேட்:
இந்த ரணபாலி படமானது 1960-களில் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் நடந்த உண்மையான கதையா மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாம். இதில் விஜய் தேவரகொண்டா “ரணபாலி” என்ற வேடத்திலும், நடிகை ராஷ்மிகா மந்தனா “ஜெயாம்மா” என்ற வேடத்திலும் நடித்துள்ளாராம். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு இடைப்பட்ட மாதத்தில் தொடங்கிய நிலையில், மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்நிலையில் இப்படத்தின் டீசர் வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 09ம் தேதியில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் ரணபாலி படத்தின் டீசர் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு பதிவு:
The legend of the cursed land rises 🔥#RanabaaliTeaser out on September 9th ❤🔥#Ranabaali GRAND RELEASE WORLDWIDE ON 16.10.26.#NeverForget#RanabaaliOnOct16th@TheDeverakonda @iamRashmika @Rahul_Sankrityn @MythriOfficial #ArnoldVosloo @AjayAtulOnline @nirav_dop… pic.twitter.com/k8537iCKPM
— Mythri Movie Makers (@MythriOfficial) September 7, 2026
இந்த படமானது சிறப்பான ஆக்ஷன் மற்றும் அதிரடி கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்காக விஜய் தேவரகொண்டா பல்வேறு சவால்களை செய்துள்ளார். பீரியாட்டிக் கதைக்களத்தில் இப்படம் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், இதன் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. மைத்ரி மூவி மேக்கரஸ் இப்படத்தை தயாரிக்க, இசையமைப்பாளர் அஜய்-அதுல் இசையமைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: தமிழ் சினிமாவின் உண்மையான எண்டர்டெயினர் கே.எஸ்.ரவிக்குமார்… கொண்டாடும் ரசிகர்கள்!
இவரின் இசையில் இந்த படத்தில் “யெந்தையா சாமி” என்ற முதல் பாடல், விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் திருமணத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டிருந்தது. இப்படம் வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. அதிக முன்னிட்டு தொடர்ந்து இப்படத்தின் அப்டேட்டுகள் வெளியாகும் என் ஏதிர்பார்க்கப்படுகிறது.