பூஜைகளுடன் தொடங்கியது விஜய் தேவரகொண்டாவின் புது பட ஷூட்டிங் – வீடியோ இதோ!
VDxSHOURYUV Movie: தென்னிந்திய சினிமாவில் இளம் நயகனாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துவருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் புது புது படங்களில் ஒப்பந்தமாகி நடித்துவரும் நிலையில், தற்போது ஹாய் நானா பட இயக்குநர் ஷௌர்யுவ் இயக்கத்தில் புது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் இன்று (20/04/2026) பூஜைகளுடன் தொடங்கியுள்ளது.
தெலுங்கு சினிமாவில் இளம் நாயகனாக, புது புது படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துவருபவர் விஜய் தேவரகொண்டா (Vijay Deverakonda). இவரை திருமணம் கடந்த 2026ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்றிருந்த நிலையில், தற்போது மீண்டும் படப்பிடிப்புகளில் பிசியாக இருந்துவருகிறார். இவர் ஏற்கனவே ரணபாலி (Ranabaali), ரௌடி ஜனார்தனா (Rowdy janardhana) போன்ற படங்களில் நடித்துவந்த நிலையில், மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளார். நானியின் நடிப்பில் வெளியான ஹாய் நானா (Hi Nana) படத்தை இயக்கியிருந்த, இயக்குநர் ஷௌர்யுவ் (Shouryuv) இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் அறிவிப்புகள் சில நாட்களுக்கு முன் இணையத்தில் வெளியாகியிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் இந்த படத்தின் ஷூட்டிங் குறித்த அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
இப்படமானது தற்காலிகமாக VDxSHOURYUV என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று 2026 ஏப்ரல் 20ம் தேதியில் இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கியுள்ளது. இந்த பூஜையில் கலந்துகொண்டு, நடிகர் நானி (Nani) படத்தின் ஷூட்டிங்கை தொடங்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இது தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: அந்த நடிகைக்கு பிறகு.. மமிதா பைஜூவின் நடிப்பை பார்த்து வியந்தேன் – தனுஷ் பேச்சு!
விஜய் தேவரகொண்டாவின் VDxSHOURYUV படத்தின் ஷூட்டிங் பூஜை வீடியோ பதிவு:
Moments for the day 🔥
With #VDxSHOURYUV Pooja Ceremony ❤️That’s a roar…
coming straight from @NameisNani for @TheDeverakonda ❤️🔥@shouryuv @HeshamAWmusic #AlejandroMartínez @sureshsrajan #EricDurst @editorpraveen #SachinLovalekar @VyraEnts pic.twitter.com/cXXjOnhWCg— Vyra Entertainments (@VyraEnts) April 20, 2026
இந்த VDxSHOURYUV படத்தில் விஜய் தேவரகொண்டா லீட் நாயகனாக நடித்துவருகிறார். மேலும் இதில் அவர் ஒரு வித்தியாசமான ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஒரு பீரியட் ரோம்-காம் படமாக இது உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இப்படத்தில் லீட் நடிகராக விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ள நிலையில், கதாநாயகி யார் என இன்னும் அறிவிப்புகள் வெளியாகவில்லை. புதுமுக நடிகைகள் நடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க : அட்லி மற்றும் பிரியா தம்பதிக்கு இரண்டாது குழந்தை பிறந்தது – வைரலாகும் போஸ்ட்
விஜய் தேவரகொண்டா தற்போது ரணபாலி மற்றும் ரௌடி ஜனார்தனா போன்ற படங்களில் பிசியாக இருக்கிறார். இதில் ரணபாலி படத்தில் ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து ஜோடியாக நடித்துவருகிறார். இப்படம் 1960-களில் பிரிட்டிஸ்ட் ஆட்சிக்காலத்தில் நடந்த உண்மை கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளது. மேலும் ரௌடி ஜனார்தனா என்ற படத்திலும் நடித்துவரும் நிலையில், இதுவும் உண்மையான கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுவருகிறது. இதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு படங்களிலும் இந்த 2026ம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என கூறப்படுகிறது.