ஹாய் நானா பட இயக்குநருடன் இணையும் நடிகர் விஜய் தேவரகொண்டா – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
Vijay Devarakonda New Movie Update: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவரது நடிப்பில் அடுத்தடுத்துப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி 2026-ம் ஆண்டு நடிகை ராஷ்மிகா மந்தனாவை காதல் திருமணம் செய்துக்கொண்டார். இந்த செய்தி ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் இணைந்து நடித்தப் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து நடிக்கும் படம் ரணபாலி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் படம் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இந்த நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா அடுத்ததாக நடிக்க உள்ள படங்கள் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. இவருக்கு தெலுங்கு சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் ரசிகர்கள் அதிக அளவில் உள்ளதால் இவரது படங்கல் தொடர்பான அப்டேட்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த வகையில் அடுத்ததாக நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்க உள்ள அடுத்தப் படம் குறித்து அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.




ஹாய் நானா பட இயக்குநருடன் இணையும் நடிகர் விஜய் தேவரகொண்டா:
அதன்படி நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதில் ஹாய் நானா என்ற ஹிட் படத்தை எழுதி இயக்கிய இயக்குநர் ஷௌரியவ் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மிரட்டலான திரைப்படத்தை உருவாக்கும் சவாலான பணியை ஏற்றுக்கொண்டிருக்கும் குழுவை இதோ அறிமுகப்படுத்துகிறோம். ஷௌரியவின் கட்டுக்கடங்காத கற்பனை வளத்துடனும், ஆழ்ந்த உணர்வுடனும் இணைந்து, ஆற்றல் பொங்கும் இந்தக் சர்வதேசக் குழு இப்படைப்பில் பணியாற்றுவதைக் காண்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கர்ஜியுங்கள் நண்பர்களே! நான் எனது முழு உழைப்பையும் உங்களுக்காக அர்ப்பணிப்பேன். உச்சகட்ட உற்சாகத்துடனும், நிறைந்த அன்புடனும் என்று விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.
Also Read… Jailer 2: இணையத்தில் கசிந்த ஜெயிலர் 2 காட்சிகள்.. படக்குழு உடனடியாக எடுத்த முடிவு!
நடிகர் விஜய் தேவரகொண்டா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
My next is – #VDxShouryuv ❤️
Introducing the team taking on the scary task of making this intimidating film.
So happy to have this firecracker global team working on this one with Shouryuv and his wild imagination and intense heart 🙂
ROAR my friends. I will give you my all.… pic.twitter.com/l1QXpoOmk3
— Vijay Deverakonda (@TheDeverakonda) April 18, 2026
Also Read… Thaai Kizhavi: மக்களின் பேராதரவு.. திரையரங்குகளில் 50வது நாளை கடந்த தாய் கிழவி!