ViRosh: திருமணம் கொண்டாட்டம் முடிந்து ஷூட்டிங் வந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!
ViRosh Couple Ranabaali Movie: தெலுங்கு சினிமாவில் பிரபலமான ஜோடியாக இருந்துவருபவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் இருவருமே இணைந்து நடித்துவரும் புது படம்தான் ரணபாலி. இந்நிலையில் திருமணம் முடிந்து இப்பட ஷூட்டிங்கில், இந்த ஜோடி இணைந்துள்ள நிலையில், படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் நிஜ ஜோடியாக இருந்துவருபவர்கள் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) மற்றும் விஜய் தேவரகொண்டா (Vijay Devarekonda). இவர்கள் இருவருமே கடந்த 2026 பிப்ரவரி 24ம் தேதியில் மிகவும் பிரம்மாண்டமாக தங்களின் திருமணத்தை செய்திருந்தனர். இவர்களின் திருமண கொண்டாட்டம் கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் மேலாக நடந்துவந்தது. அந்த வகையில் இந்த ஜோடி இறுதியாக டியர் கம்பிரெட் (Dear Comrade) என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தை அடுத்ததாக கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்துவரும் புது திரைப்படம்தான் ரணபாலி (Ranabaali). இப்படமானது கடந்த 1965ம் ஆண்டில் ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் நடந்த உண்மையான சம்பவத்தை மையமாக கொண்டு தயாராகிவருகிறது. அந்த வகையில் இப்படத்தில் இயக்குநர் ராகுல் சங்கிருத்யன் (Rahul Sankrityan) இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது.
அந்த வகையில் திருமணத்தை முடித்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு இப்படத்தின் ஷூட்டிங்கில், விரோஷ் ஜோடி இணைந்துள்ளது. அந்த வகையில் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் அனைவரும் இணைந்து, விரோஷ் தம்பதிக்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான பதிவை படக்குழு வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: மிஸ்டர் எக்ஸ் படம் வெளியானது கௌதம் கலக்கிட்டாருனு எல்லாரும் சொல்வாங்க – ஆர்யா பேச்சு!
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா திருமணத்தை கொண்டாடியது குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:
Ranabaali – Jayamma @TheDeverakonda – @iamRashmika
Back on sets ❤️🔥
An eternal bond ❤️
Team #Ranabaali wished the newly weds on sets with a celebration ✨
Grand release worldwide on September 11th 🔥@Rahul_Sankrityn @MythriOfficial #ArnoldVosloo @AjayAtulOnline @nirav_dop… pic.twitter.com/yjdMLTEWkE
— Mythri Movie Makers (@MythriOfficial) April 11, 2026
ரணாபாலி படக்குழு இணைந்து ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் திருமணத்தை கொண்டாடவும் வகையில் இவ்வாறு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இது தொடர்பாக படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: சரியான முறையில் படத்தைக் கண்டு மகிழ்வோம் – ஜன நாயகன் படம் குறித்து மமிதா பைஜூ!
இந்த ரணபாலி திரைப்படமானது 1965ம் ஆண்டில் தெலுங்கானாவில் நடந்த உண்மையான சம்பவத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்டுவருகிறது. இப்படத்தில் விஜய் தேவரகொண்டா “ரணபாலி” என்ற வேடத்திலும்,அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா “ஜெயம்மா “என்ற வேடத்திலும் இணைந்து நடித்துள்ளார். இந்த ஜோடி பல ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தில் இணைந்து நடித்துவரும் நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துவாருகிறது. அந்த வகையில் வரும் 2026 செப்டம்பர் 11ம் தேதியில் இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடையும் என கூறப்படுகிறது.