AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Mamitha Baiju: சரியான முறையில் படத்தைக் கண்டு மகிழ்வோம் – ஜன நாயகன் படம் குறித்து மமிதா பைஜூ!

Mamitha Baiju Condemns Jana Nayagan Leak: தென்னிந்திய இளம் சென்சேஷனல் நடிகையாக இருந்துவருபவர் மமிதா பைஜூ. சமீபத்தில் ஜன நாயகன் படம் இணையத்தில் லீக்கானது குறித்து கண்டனம் தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார். இது குறித்த தகவல் வைரலாகிவருகிறது.

Mamitha Baiju: சரியான முறையில் படத்தைக் கண்டு மகிழ்வோம் – ஜன நாயகன் படம் குறித்து மமிதா பைஜூ!
ஜன நாயகன் கசிவுக்கு மமிதா பைஜு கண்டனம்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 11 Apr 2026 18:54 PM IST

இளம் நடிகையாக தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவராக இருந்துவருபவர் மமிதா பைஜூ (Mamitha Baiju). இவர் தளபதி விஜய்யுடன் (Thalapathy Vijay) ஜன நாயகன் (Jana Nayagan) திரைப்படத்தில் அவரின் மகளாக நடித்துள்ளார். இந்த படமே இவர் முதல் முதலில் நடித்திருந்த பிக் பட்ஜெட் திரைப்படமாகும்.  இப்படத்தை இயக்குநர் எச்.வினோத் (H. Vinoth) இயக்க, மிகவும் பிரம்மாண்ட படமாக தயாராகியிருந்தது. மேலும் இப்படத்தில் தளபதி விஜய் மற்றும் மமிதா பைஜுவுடன் நடிகர்கள், பூஜா ஹெக்டே (Pooja Hegde), நரேன், பாபி தியோல், பிரியாமணி மற்றும் ஸ்ரீநாத் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி மதத்திலே வெளியாகியிருக்க வேண்டியது. சென்சார் பிரச்சனையின் காரணமாக ரிலீஸ் தேதியில் தாமதம் ஏற்பட்டுவந்தது.

இந்நிலையில் யாராலோ ஜன நாயகன் படம் முழுவதுமாக இணையத்தில் கசிந்துள்ளது. இந்நிலையில் கிட்டத்தட்ட 3 மணிநேரம் கொண்ட இப்படம் முழுவதுமாக இணையத்தில் கசிந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த திரையுலகினர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. அந்த வகையில் தற்போது இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நடிகை மமிதா பைஜூ எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ரன் படத்தின் ரீ ரிலீஸ் எப்போது? தேதியை வெளியிட்ட மாதவன்

ஜன நாயகன் பட லீக்கிற்கு கண்டனம் தெரிவித்து மமிதா பைஜூ வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த பதிவில் நடிகை மமிதா பைஜூ, “ஒவ்வொரு நாளும் தங்களின் சிறந்த பங்களிப்பை வழங்கும் பலரின் கடின உழைப்பு, பேரார்வம் மற்றும் அர்ப்பணிப்பின் மூலமே ஒரு திரைப்படம் உயிராக உருவாகிறது. அதை சட்டவிரோதமாகப் பரப்பப்படுவதை பார்ப்பதற்கு உண்மையிலேயே ஏமாற்றமளிக்கிறது. சில தருணங்கள், அவை உருவாக்கப்பட்ட நோக்கத்தின்படியே, பெரிய திரையில் ஒன்றாகக் கண்டு ரசிக்கப்பட வேண்டியவை அதிகாரப்பூர்வமாக வெளியாகும் வரை காத்திருப்பது.

சரியான முறையில் அதைக் கண்டு மகிழ்வோம் என்றும் அந்த பதிவில் தெவித்துள்ளார். மேலும் தயவுசெய்து திருட்டுத்தனத்தை ஊக்குவிக்காதீர்கள். அதன் மூலமே நாம் சினிமாவையும், அதற்குப் பின்னால் உள்ள அனைவரையும் பாதுகாக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: புகார் கொடுத்த படக்குழு.. ஜன நாயகன் படம் லீக் செய்தது யார்? சைபர் கிரைம் போலீசார் விசாரணை!

ஏற்கனவே ஜன நாயகன் திரைப்படத்திலிருந்து பூஜா ஹெக்டே, ஹெச். வினோத், ஸ்ரீநாத், லோகேஷ் கனகராஜ், உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கண்டன பதிவை வெளியிட்டிருந்தனர். மேலும் விஜய் தேவரகொண்டா, சூர்யா, சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் சிரஞ்சீவி என ஒட்டுமொத்த தென்னிந்திய பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து பதிவை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us