AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Jana Nayagan: புகார் கொடுத்த படக்குழு.. ஜன நாயகன் படம் லீக் செய்தது யார்? சைபர் கிரைம் போலீசார் விசாரணை!

Jana Nayagan Cyber Crime Investigation: தளபதி விஜய்யின் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகியிருந்த படம்தான் ஜன நாயகன். இப்படமானது சில காரணங்களால இன்னும் திரையரங்குகளில் வெளியிடப்படாமல் உள்ள நிலையில், இணையத்தில் கசிந்திருந்தது. இது தொடர்பாக படக்குழு புகார் அளித்திருந்த நிலையில், சைபர் க்ரைம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Jana Nayagan: புகார் கொடுத்த படக்குழு.. ஜன நாயகன் படம் லீக் செய்தது யார்? சைபர் கிரைம் போலீசார் விசாரணை!
ஜன நாயகன் பட சைபர் கிரைம் விசாரணைImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 11 Apr 2026 16:42 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக திரைப்படங்களில் நடித்துவருபவர் தளபதி விஜய் (Thalapathy Vijay). இவர் தற்போது முழுமையாக அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில், சினிமாவில் இனிமேல் படங்களில் நடிக்கமாட்டேன் என தெரிவித்திருந்தார். அந்த வகையில் அவரின் கடைசி திரைப்படமாக தயாராகியுள்ளதுதான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் (H. Vinoth) இயக்கியிருந்த நிலையில், கே.வி.என் ப்ரொடக்ஷன் நிறுவனம் கிட்டத்தட்ட ரூ 500 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. அந்த வகையில் இதில் தளபதி விஜய்யுடன் நடிகர்கள் பூஜா ஹெக்டே (Pooja Hegde), மமிதா பைஜூ (Mamitha baiju), பாபி தியோல், நரேன், பிரியாமணி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். அந்த வகையில் இப்படம் 2026 ஜனவரி மாதத்திலே வெளியாகவேண்டிய நிலையில், கிட்டத்தட்ட 3 மாதங்கள் கடந்தும் இன்னும் ரிலீஸ் செய்யப்படாமல் உள்ளது.

இவ்வாறு இப்படத்தின் ரிலீஸ் தேதியானது தள்ளிக்கொண்டே சென்ற நிலையில், சமீபத்தில் இப்படமானது முழுவதுமாக இணையத்தில் கசிந்திருந்தது. இதற்கு தமிழ் திரைப்பட சங்கத்தினர் மற்றும் ஜன நாயகன் படக்குழு சைபர் கிரைம் போலீசில் வழக்கு கொடுத்திருந்தனர். அந்த வகையில் தமிழக சைபர் கிரைம் போலீசார், ஜன நாயகன் படத்தின் லீக் குறித்த முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: விஜய் சாரை கடைசி முறையாக கொண்டாட வேண்டாமா? திருட்டுத்தனமாக பார்ப்பதை ஊக்குவிக்க வேண்டாம் – நடிகை பூஜா ஹெக்டே கண்டனம்!

ஜன நாயகன் படத்தின் லீக் விவகாரத்தின் விசாரணையை தொடங்கிய சைபர் கிரைம்:

தளபதி விஜய்யின் இந்த ஜன நாயகன் திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிடப்பட்டிருந்த நிலையில், ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது. இது தொடர்பாக ஜன நாயகன் படக்குழு சைபர் கிரைமில் வழக்கு பதிவு செய்திருந்தது. அந்த வகையில் இப்படத்தின் இணையத்தில் லீக் செய்தது யார் என்பது குறித்த விசாரணையை சைபர் கிராம் போலீசார் தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: ஜன நாயகனுகாக குரல் கொடுக்கும் கமல் ஹாசன் முதல் பான் இந்திய பிரபலங்கள்

சமூக வலைதளங்களில் திருட்டு உள்ளடக்கத்தைப் பகிர்ந்தது தொடர்பாக ஐந்துக்கும் மேற்பட்ட சந்தேக நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது, மேலும் இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

ஜன நாயகன் திரைப்படம் லீக் விவகார விசாரணை குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:

இந்த ஜன நாயகன் படம் லீக் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே பாதித்துள்ளது என கூறலாம். இப்படம் கிட்டத்தட்ட ரூ 500 கோடி பட்ஜெட் என்ற நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அனால் தற்போது இணையத்தில் லீக்கானது குறித்து இதன் வசூல் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இப்படத்தின் கசிவை எதிர்த்து தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட சினிமா பிரபலங்கள் கண்டித்து பதிவுகளை வெளியிட்டுவருகின்றனர்.

Follow Us