இதெல்லாம் நியாயமே இல்லை… தளபதி விஜய்காக குரல் கொடுத்த சூர்யா!
Suriya posted a post about the Jana Nayagan movie: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது இணையத்தில் ஜன நாயகன் படம் கசிந்ததற்கு எதிராக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.
கோலிவுட் சினிமா மட்டும் இன்றி ஒட்டுமொத்த இந்திய சினிமவும் தற்போது பரபரப்பாக பேசி வருவது ஜன நாயகன் படம் இணையத்தில் கசிந்த விசயத்தைதான். பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடெக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து உள்ள நிலையில் இயக்குநர் எச்.வினோத் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் தளபதி விஜய் நாயகனாக நடித்து உள்ள நிலையில் அவருடன் இணைந்து பான் இந்திய நட்சத்திரங்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இசையமைப்பாளர் அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்து இருந்த நிலையில் படம் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாவதாக இருந்தது. ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக படம் திரையரங்குகளில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து இந்த பிரச்சனை காரணமாக படம் திரையரங்குகளில் வெளியாகாமல் இருந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை ஜன நாயகன் படத்தின் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானது படக்குழுவினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படத்தின் காட்சிகளை பதிவிரக்கமோ அல்லது மற்றவர்களுக்கு அனுப்பவோ கூடாது என்றும் அப்படி செய்பவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்றும் படக்குழு நோட்டீஸ் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து பான் இந்திய அளவில் பிரபலங்கள் பலர் இந்த செயலுக்கு கண்டனத்தையும் பதிவிட்டு வருகின்றனர்.




தளபதி விஜய்காக குரல் கொடுத்த சூர்யா:
அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக உள்ள நடிகர் சூர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இதயத்தை நொறுக்கும், அநீதியான ஒரு நிகழ்வு இது. ஒரு முழுப் படக்குழுவின் பேரார்வம் இறுதியில் இப்படிச் சீரழிக்கப்பட்டுவிட்டது. உங்கள் அனைவரையும் நான் மிகுந்த நேர்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து இந்தப் படத்தை இங்கே பார்க்கவோ, பகிரவோ அல்லது விவாதிக்கவோ வேண்டாம். அவர்களின் உழைப்பை மதித்திடுங்கள். நான் என் நண்பர்களுக்குத் துணையாக நிற்கிறேன். இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது ஒருபோதும் மன்னிக்க முடியாத குற்றம் என்று அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார்.
Also Read… லவ் இன்சூரன்ஸ் கம்பெனி முதல் TN 2026 முதல்… நாளை எந்தப் படத்தை முதலில் பார்ப்பீங்க
நடிகர் சூர்யா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Heartbreaking and unfair — an entire team’s passion reduced to this. I request you all with honesty, please don’t watch, share, or discuss the film here. Respect their work. I stand with my friends and condemn the act, it’s unforgivable!#JanaNayagan
— Suriya Sivakumar (@Suriya_offl) April 10, 2026
Also Read… Raaka Movie: அல்லு அர்ஜுனின் ராக்கா படத்தின் ‘மேக் வே ஃபார் தி கிங்’ தீம் பாடல் வெளியானது!