AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரஜினிகாந்தின் தலைவர் 173 படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்? வைரலாகும் தகவல்

Thalaivar 173 Movie Update: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக தலைவர் 173 படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் மலையாள சினிமாவில் உள்ள பிரபல நடிகர்கள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்தின் தலைவர் 173 படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்? வைரலாகும் தகவல்
ரஜினிகாந்த் - சிபி சக்ரவர்த்திImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Apr 2026 18:16 PM IST

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தற்போது ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. முதல் பாகம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இரண்டாம் பாகும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் எழுதி இயக்கி வரும் நிலையில் படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் முடிவடைய உள்ளது. மேலும் இந்த 2026-ம் ஆண்டின் இறுதிக்குள் இந்த ஜெயிலர் 2 படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பையும் தயாரிப்பு நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அவரது 173-வது படத்தில் கவனம் செலுத்த உள்ளார்.

தற்போது தலைவர் 173 என்று அழைக்கப்படும் அந்தப் படத்தை முதலில் இயக்குநர் சுந்தர் சி இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. பிறகு அவர் இந்தப் படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தப் பிறகு இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தினை கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைவர் 173 படத்தில் இணையும் நடிகர் பேசில் ஜோசஃப்?

இந்த தலைவர் 173 படத்தின் புரோமோ ஷூட் வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாக முன்பு சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து பிரபல மலையாள நடிகர் பேசில் ஜோசஃப் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகல்கள் பரவி வைரலாகி வருகின்றது. மேலும் இந்தப் படத்தில் பேசில் ஜோசஃப் நடிகர் ரஜினிகாந்தின் மகனாக நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… AK 64 படத்தின் தயாரிப்பாளர் இவரா? அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… LIK Movie: பிரதீப் ரங்கநாதனின் LIK படத்திலிருந்து வெளியானது ‘வைப் வாஸே’ பாடல்!

Follow Us