AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கமல் சாரோட அந்த படத்தைப் பாத்துட்டு 15 நாள் எனக்கு தூக்கம் வரல – சேரன்

Director And Actor Cheran Talks About Kamal Haasans Gunaa Movie: தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சேரன். இவர் முன்னதாக அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகர் கமல் ஹாசனின் குணா படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கமல் சாரோட அந்த படத்தைப் பாத்துட்டு 15 நாள் எனக்கு தூக்கம் வரல – சேரன்
சேரன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Apr 2026 21:10 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 1991-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் குணா. இந்தப் படத்தை இயக்குநர் சந்தான பாரதி இயக்கி இருந்தார். மேலும் திரைக்கதையை சப் ஜான் மற்றும் பாலகுமாரன் ஆகியோர் இணைந்து எழுதி இருந்தனர். மேலும் இந்தப் படத்தில் உலக நாயகன் நடிகர் கமல் ஹாசன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் ரேகா, ரோஷினி, ஜனகராஜ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், கிரீஷ் கர்னாட், சரத் ​​சக்சேனா, பிரதீப் சக்தி, அனந்து, சேது விநாயகம், அஜய் ரத்னம், எஸ்.வரலட்சுமி, காக்கா ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.சிவாஜி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படம் திரையரங்குகலில் வெளியான போது ரசிகர்கலீடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த குணா படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சுவாதி சித்ரா இன்டர்நேஷனல் சார்பாக தயாரிப்பாளர் அலமேலு சுப்பிரமணியம் தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

குணா படம் பாத்துட்டு என்னால சீட்ட விட்டு எந்திரிக்க முடியல:

கமல் ஹாசன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த இந்தப் படம் திரையுலகில் பலருக்கு பாடமாக இருந்து உள்ளது. அதனை பல பிரலங்கள் வெளிப்படையாக தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் முன்னதாக இயக்குநர் சேரன் அளித்தப் பேட்டியில் இந்த குணா படம் குறித்து வெளிப்படையாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதன்படி இயக்குநர் சேரன் அந்தப் பேட்டியில் கூறியதாவது.குணா படம் பாத்துட்டு என்னால சீட்ட விட்டு எந்திரிக்க முடியல, இப்படி ஒரு படைப்பு. இப்படி ஒரு படமானு பிரமிப்பு, 3ஷோ தொடர்ந்து பாக்குறேன் பாத்துட்டு 15நாள் எனக்கு தூக்கம் வரல, எப்பிடியாவது கமல் ஹாசன் சார்ட வேலை செய்யனும்னு மகாநதில சேர்ந்தேன் என்று சேரன் தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாஅகி வருகின்றது.

Also Read… ரிலீஸ் தேதியை ஒத்திவைத்தது பள்ளிசட்டம்பி படக்குழு – என்ன காரணம் தெரியுமா?

இணையத்தில் வைரலாகும் சேரன் பேச்சு:

Also Read… 17 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை மாளவிகா!

Follow Us