ரிலீஸ் தேதியை ஒத்திவைத்தது பள்ளிசட்டம்பி படக்குழு – என்ன காரணம் தெரியுமா?
Pallichattambi movie postponed to 15th April 2026 due to censor issue: மலையாள சினிமாவில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி உள்ள பள்ளிச்சட்டம்பி படத்தின் ரிலீஸ் தேதியை சென்சார் பிரச்சனை காரணமாக படக்குழு ஒத்தி வைத்துள்ளாதக தெரிவித்துள்ளது
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் டொவினோ தாமஸ். இவரது நடிப்பில் மலையாள இச்னிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் மலையாள சினிமாவில் உருவாகி உள்ள படம் பள்ளிச்சட்டம்பி. பீரியட் ஆக்ஷன் ட்ராமாவாக உருவாகி உள்ள இந்தப் படத்தினை இயக்குநர் டிஜோ ஜோஷ் ஆண்டனி எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் டொவினோ தாமஸிற்கு ஜோடியாக நடிகை கயடு லோஹர் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து விஜயராகவன், ஜானி ஆண்டனி, சுதீர் கரமனா என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்து உள்ள நிலையில் படத்தி இருந்து முன்னதாக வெளியான பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. படம் வெளியாவதற்கு முன்னதாகவே பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் வருகின்ற 10-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவித்து இருந்த நிலையில் படத்தின் வெளியீட்டை படக்குழு ஒத்தி வைத்துள்ளது.




ரிலீஸ் தேதியை ஒத்திவைத்தது பள்ளிசட்டம்பி படக்குழு:
அதன்படி டொவினோ தாமஸ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, பள்ளிச்சட்டம்பி திரைப்படம் விஷு அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. கேரளாவின் மறுமலர்ச்சி வரலாற்றில் மறக்கப்பட்ட ஒரு அசாதாரண மனிதரான சட்டம்பியின் கதையைச் சொல்ல நாங்கள் வருகிறோம். தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் தொழில்நுட்பச் சிக்கல்களை நாங்கள் எதிர்கொள்கிறோம். எனவே, திரைப்படத்தின் வெளியீடு ஏப்ரல் 15, விஷு அன்றுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நல்வாய்ப்பில் உங்கள் அன்பும் ஆதரவும் எங்களுடன் இருக்கும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
Also Read… தெலுங்கு சினிமாவில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த அனகனக ஒக்க ராஜூ படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
நடிகர் டொவினோ தாமஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#PalliChattambi on April 15th! pic.twitter.com/VbPPqq3bBq
— Tovino Thomas (@ttovino) April 7, 2026
Also Read… AA22 Movie: அட்லீ – அல்லு அர்ஜுனின் AA22xA6.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!