AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தெலுங்கு சினிமாவில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த அனகனக ஒக்க ராஜூ படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்? 

Anaganaga Oka Raju Telugu Movie OTT Update Here: தெலுங்கு சினிமாவில் காமெடி ட்ராமா பாணியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் அனகனக ஒக்க ராஜூ. இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தெலுங்கு சினிமாவில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த அனகனக ஒக்க ராஜூ படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்? 
அனகனக ஒக்க ராஜூImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Apr 2026 20:07 PM IST

தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து ஃபேமிலி செண்டிமெண்ட், காமெடி ட்ராமா மற்றும் ரொமாண்டிக் ட்ராமா பாணியில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்த பாணியில் வெளியாகும் படங்கள் அனைத்தும் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியகா இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அப்படி தெலுங்கு சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக அமைந்தது அனகனக ஒக்க ராஜூ படம். காமெடி ட்ராமா பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தை இயக்குநர் மாரி இயக்கி இருந்த நிலையில் திரைக்கதையை நவீன் பொலிஷெட்டி மற்றும் சின்மயி காட்ராசு ஆகியோர் இணைந்து எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் கடந்த ஜனவரி மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.

மேலும் திரையரங்குகளில் இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் நவீன் பொலிஷெட்டி நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை மீனாட்சி சௌத்ரி நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ராவ் ரமேஷ், கோபராஜு ரமணா, சம்மக் சந்திரா, ஆனந்த் பாபு, மதுசூதன ராவ், மாமிளா ஷைலஜா பிரியா, சிவன்நாராயண நரிபெட்டி, ஜான்சி, முக்கு அவினாஷ், மகேஷ் அச்சந்தா, பத்ரம், ராக்கெட் ராகவா, பம்மி சாய், காதம்பரி கிரண் குமார், ரோகினி ரெட்டி, லட்டு சந்தோஷ், பிரசாத் அட்டாலா, பீமலா ரேவந்த் பவன் சாய் சுபாஷ் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

ஓடிடியில் வெளியாகி உள்ள அனகனக ஒக்க ராஜூ படம் எப்படி இருக்கு?

வாழ்ந்துகெட்ட ஜமீன் குடும்பத்தின் வாரிசாக இருக்கிறார் நாயகன் நவீன் பொலிஷெட்டி. தனது தாத்தா பெண்கள் சவகாசத்தில் மொத்த சொத்தையும் இழந்ததால் ஜமீன் குடும்பம் என்ற பெயர் மட்டுமே இருக்கிறது. ஆனால் ஜமீன் குடும்பத்திடம் இருக்கும் பொருளாதாரம் கூட இல்லாமல் இருக்கிறார்கள் நவீன் பொலிஷ்டேடியின் குடும்பத்தினர். ஆனால் வெளியுலகில் தாங்கள் நல்ல வசதியானவர்களாக் காட்டிக்கொள்ளவும் அவர் தவறவில்லை.

Also Read… ரீமேக் படமா இருந்தாலும் சூர்யா சார் எனக்கு கார் பரிசளித்தார் – விக்னேஷ் சிவன் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!

இப்படி இருக்கும் நிலையில் நவீன் பொலிஷெட்டி அவரது அத்தை மகன் புஜ்ஜி பாவுவின் திருமணத்திற்கு செல்கிறார். அப்போது அவர் மிகவும் பணக்கார பெண்ணை காதலித்து திருமணம் செய்கிறார் என்பது தெரிகிறது. அந்த திருமணத்தில் சொந்த அத்தையால் அவமானப்படுத்தப்படும் நவீன் பொலிஷெட்டி அவரை விட பெரிய பணக்கார பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்கிறார்.

அப்படி பெண் பார்க்கும் படலத்தில் இருக்கும் போது பக்கத்து ஊரில் உள்ள பெரிய பணக்கார பெண்ணான மீனாட்சி சௌத்ரியை பார்க்கிறார். அவரை எப்படி காதலில் விழவைத்து திருமணம் செய்தார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… கணவருடன் பிரச்சனை… தற்கொலை செய்துகொண்ட கயல் சீரியல் நடிகை – சோகத்தில் ரசிகர்கள்

Follow Us