Ranbir Kapoor: ராமாயணா படத்தில் ரெட்டை வேடத்தில் ரன்பீர் கபூர்.. 2வது கதாபாத்திரம் என்ன தெரியுமா?
Ranbir Kapoor Dual Role In Ramayana: பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ரன்பீர் கபூர். இவர் இயக்குநர் நிதேஷ் திவாரியின் ராமாயணா படத்தில் நடித்துள்ளார். இதில் ராமராக இவர் நடித்துள்ள நிலையில், மேலும் ஒரு வேடத்தில் நடித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அது என்ன கதாபாத்திரம் என பார்க்கலாம்.
இந்தி சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ரன்பீர் கபூர் (Ranbir Kapoor). இவரின் நடிப்பில் தொடர்ந்து இந்தி மொழியில் பல படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் அனிமல் (Animal). இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில், வெளியான இப்படம் இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்தது. இதையடுத்தக்க கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக இவர் நடித்துவரும் பிரம்மாண்ட படம்தான் “ராமாயணா” (Ramayana). இதை பிரபல இயக்குநர் நிதேஷ் திவாரி (Nitesh Tiwari) இயக்கும் நிலையில், கிட்டத்தட்ட ரூ 4000 கோடி பட்ஜெட்டில் தயாராகிவருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் இந்து கடவுளான ஸ்ரீ ராமர் வேடத்தில் நடித்துள்ளார். மேலும் சீதையாக நடிகை சாய் பல்லவியும் (Sai Pallavi), ராவணனாக நடிகர் யாஷும் (Yash) நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திலிருந்து சமீபத்தில், ஹனுமான் ஜெயந்தியை முன்னிட்டு, ராமரின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. இது பிரபலமாக பேசப்பட்டுவந்தது. இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராக நடித்துள்ள நிலையில், மேலும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளதக்க தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: ஹாய் படத்தில் முதல் காட்சியே அதுதான்.. கவினிடம் நயன்தாரா கேட்ட கேள்வி? – இயக்குநர் விஷ்ணு எடவன் பேச்சு!
ராமாயணா திரைப்படத்தில் ரெட்டை வேடத்தில் நடிப்பதாக ரன்பீர் கபூர்:
சமீபத்தில் ராமா கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது. அப்போது நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த நடிகர் ரன்பீர் கபூர், ராமாயணா படத்தில் ரெட்டை வேடத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். அதில் அவர் பேசுகையில், “ராமாயணா படத்தில் ராமர் அவதாரமாகவும், அதற்கு முந்தைய பரசுராமர் அவதாரம் என, இந்த இரு கதாபாத்திரங்களும் எனக்கு கிடைத்த மிகசிறந்த வாய்ப்பு” எனது அதில் தெரிவித்துள்ளார். ஆக மொத்தத்தில் ராமாயணா படத்தில் நடிகர் ரன்பீர் கபூர், ராமர் மற்றும் பரசுராமர் என இரு வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எமோஷனல் பேமிலி கதையில்.. விஜய் ஆண்டனி – ஸ்வாசிகவின் நூறு சாமி பட டீசர் இதோ!
ராமாயணா படக்குழு வெளியிட்ட ராமர் கதாபாத்திர அறிமுக வீடியோ பதிவு:
Rama is the greatest of all time because he lived a life where the choices he made were always in the benefit of the greater good, duty over desire, and sacrifice over self.
His legacy continues to enhance and empower humanity over time and bring the belief in the goodness of… pic.twitter.com/pMGMhb7RIH
— The World Of Ramayana (@WorldOfRamayana) April 2, 2026
இந்த ராமாயணா படமானது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் தயாராகியுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் என இருபெரும் இசை ஜாம்பவான்கள் இணைந்து இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் வரும் 2026 தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. மேலும் ராமாயணா பார்ட் 2 படம், வரும் 2027ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகிறது. ஆக மொத்தத்தில் இந்த இரு பாகங்களும் இணைந்து கிட்டத்தட்ட 6 மணி நேரங்களுக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த் படம் பான் இந்திய மக்கள் மத்தியிலும், சிறப்பான வாரவெற்பி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.