AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மிகவும் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி உள்ளது ராமாயணா – வைரலாகும் டீசர்

Namit Malhotra’s Ramayana Movie Teaser Viral On Social Media: பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரன்பீர் கபூர். இவர் ராமராக நடித்து தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் ராமாயணா. இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

மிகவும் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி உள்ளது ராமாயணா – வைரலாகும் டீசர்
ராமாயணாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Apr 2026 12:43 PM IST

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் ரன்பீர் கபூர். இவர் தொடர்ந்து இந்தி சினிமாவில் படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கு என்ற் ரசிகர்கள் பட்டாளம் பான் இந்திய அளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தி சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் உதவி இயக்குநராக தனது பணியைத் தொடங்கினர். தொடர்ந்து இரண்டு மூன்று படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய ரன்பீர் கபூர் அதனைத் தொடந்து இந்தி சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதன்படி இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு இவரது படங்களின் தேர்வு சிறப்பானதாக உள்ளது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அதன்படி ரன்பீர் கபூர் நாயகனாக நடித்து இதுவரை இந்தி சினிமாவில் வெளியான படங்களில் வேக் அப் சித், ராக்கெட் சிங், ராக் ஸ்டார், பர்ஃபி, பிகே, பாம்பே வெல்வெட், சஞ்சு என பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

மேலும், நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் அனிமல். இந்தப் படம் ஒரு ஆல்ஃபா மேல் நபரை மையமாக வைத்து உருவாகி இருந்தது. படம் வெளியான போது ஆதரவுகளும் நெகட்டிவ் விமர்சனங்களும் தொடர்ந்து வந்தாலும் படம் வசூலில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தில் நடிகர் ரன்பீர் கபூரின் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது குறுப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரன்பீர் கபூரின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ராமாயணா.

ரன்பீர் கபூர் நடிப்பில் ராமாயணா படத்தின் டீசர் வெளியானது:

இயக்குநர் நித்திஷ் திவாரி இயக்கி உள்ள இந்த ராமாயணா படத்திற்கு நமித் மல்கோத்ரா திரைக்கதை எழுதி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் ரன்பீர் கபூர்  நாயகனாக நடித்து இருந்த நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் யாஷ், சாய் பல்லவி, ரவி துபே, சன்னி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இந்த ராமாயணா படத்தின் முதல் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இரண்டாம் பாடம் 2027-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராமாயணா படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த டீசரை பார்த்த ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர். மேலும் பல பாசிட்டிவான விமர்சனங்களும் இந்த டீசருக்கு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read… தியேட்டர்ல பாக்கலையா டோண்ட் ஒரி… ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது தாய் கிழவி படக்குழு

ராமாயணா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… டொவினோவின் பள்ளிச்சட்டம்பி படத்திலிருந்து வெளியானது மாவீரனே பாடல் வீடியோ

Follow Us