AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டொவினோவின் பள்ளிச்சட்டம்பி படத்திலிருந்து வெளியானது மாவீரனே பாடல் வீடியோ

Maaveerane The World of Pallichattambi Video Song | நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி உள்ள பள்ளிச்சட்டம்பி படத்தில் இருந்து மாவீரனே என்ற பாடலின் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. அது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

டொவினோவின் பள்ளிச்சட்டம்பி படத்திலிருந்து வெளியானது மாவீரனே பாடல் வீடியோ
மாவீரனே பாடல் வீடியோImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Apr 2026 14:53 PM IST

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் டொவினோ தாமஸ். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடிகர் டொவினோ தாமஸ் அதிக அளவில் மலையாள சினிமாவில் படங்களில் நடித்து வந்தாலும் அந்த படங்களை தென்னிந்திய சினிமா ரசிகர்கள் அதிக அளவில் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது. இவர் தொடர்ந்து படங்களில் நாயகனாக மட்டும் இன்றி அனைத்து விதமான கதாப்பாத்திரங்களையும் ஏற்று நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் பள்ளிச்சட்டம்பி படம். இந்தப் படத்தை இயக்குநர் டிஜோ ஜோஷ் ஆண்டனி இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர் டொவினோ தாமஸ் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் நடிகர் டொவினோ தாமஸிற்கு ஜோடியாக நடிகை கயடு லோஹர் நடித்து உள்ள நிலையில் படம் வருகின்ற 10-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

பள்ளிச்சட்டம்பி படத்திலிருந்து வெளியானது மாவீரனே பாடல் வீடியோ:

படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. மேலும் படத்தில் இருந்து தற்போது மாவீரனே என்ற பாடல் வீடியோ வெளியாகி உள்ளது. இந்தப் பாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 4 மொழிகளிலும் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடல் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… அஜித் இங்க பாரு… எங்க ஷாலினி… வைரலாகும் கியூட் வீடியோ

பள்ளிச்சட்டம்பி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Kathanar: ஹாலிவுட் பட தரத்தில்.. வெளியானது அனுஷ்காவின் ‘கத்தனார்’ படத்தின் ட்ரெய்லர்!

Follow Us