AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“தைரியமா இரு மா..” – தாராபுரம் திமுக வேட்பாளருக்கு ஆறுதல் சொன்ன மு.க.ஸ்டாலின்

MK Stalin Consoles DMK Candidate : தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யாவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே நாம வாங்குன ஓட்டுகள வாங்கிட்டோம். ஒன்றும் தவறில்லை. கொஞ்ச நாள் ஓய்வு எடுத்துவிட்டு, மக்களுக்கு நேரில் போய் நன்றி தெரிவியுங்கள் என்று தெரிவித்தார்.

“தைரியமா இரு மா..” – தாராபுரம் திமுக வேட்பாளருக்கு ஆறுதல் சொன்ன மு.க.ஸ்டாலின்
சுகன்யா - மு.க.ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Published: 09 Oct 2026 21:10 PM IST

சென்னை, அக்டோபர் 9 : தமிழகத்தில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9, 2026 இன்று நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக முறையே 2வது மற்றும் 3வது இடங்களை பிடித்தன. இந்த நிலையில் தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யாவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தாராபுரம் திமுக வேட்பாளருக்கு ஆறுதல் சொன்ன மு.க.ஸ்டாலின்

தாராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் சுகன்யா 57,370 வாக்குகள் பெற்று 2 ஆம் இடம் பெற்றார். இந்த நிலையில் தவெக வேட்பாளர் சத்தியபாமா 66841 வாக்குகள் பெற்ற நிலையில் அவரை விட திமுக வேட்பாளர் சுகன்யா 9,000 வாக்குகள் குறைவாக பெற்றிருந்தார். இந்த நிலையில் அவருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்தார். இது தொடர்பாக வைரலாகும் வீடியோவில், தைரியமாக இரு, நமக்கு 57,000 பேர் வாக்களித்திருக்கிறார்கள் அவர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். நீங்களும் கடினமாக உழைத்திருக்கிறீர்கள் என அவருக்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிக்க : Tamil Nadu Weather forecast: தமிழகத்தில் நாளை 3 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

மேலும், ஏற்கனவே நாம வாங்குன ஓட்டுகள வாங்கிட்டோம். ஒன்றும் தவறில்லை. கொஞ்ச நாள் ஓய்வு எடுத்துவிட்டு, மக்களுக்கு நேரில் போய் நன்றி தெரிவியுங்கள். இதில் உன் உழைப்பு இருக்கிறது. தைரியமாவும், சிறப்பாவும் செயல்பட்டீர்கள். வாழ்த்துகள் என்றார்.

முன்னதாக இடைத் தேர்தல் தோல்வி குறித்து அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரைமறைவில், இன்னும் சில கட்சிகளின் வாக்குகளை வாங்கப் பொய்ச்செய்தியைப் பரப்பினார்கள். ஒட்டுமொத்த அமைச்சரவையும் இரு தொகுதிகளுக்குள் மூன்று வார காலம் முடங்கியது. துரோகம் செய்த வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் காவல்துறையினரைக் கொண்டு மிரட்டப்பட்டார்கள். 17 வயது இளைஞரைக் கூட கைது செய்தார்கள் என்றார்.

‘ஆளும்கட்சிக்கு வாக்களிக்காவிட்டால் தொகுதிக்கு எதையும் செய்யமாட்டோம்’ என பிளாக்மெயில் செய்து வாக்கு வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அரசு ஊழியர்களையும் வாக்குப்பதிவின்போது மிரட்டி ஆதரவாகப் பணியாற்ற வைத்தார்கள். ‘சூரியனுக்கு வாக்களிக்கச் சொன்னால் விசிலுக்கு அழுத்தச் சொன்னார்கள்’ என்று ஒரு மூதாட்டி வெளிப்படையாகப் பேட்டியே அளித்தார். இப்படி, தன் அதிகார பலம் முழுவதையும் இடைத்தேர்தலுக்காகத் தவறாகப் பயன்படுத்தியது த.வெ.க. அரசு.

இதையும் படிக்க : மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல்.. நாதக- கம்யூனிஸ்ட் கட்சிகள் டெபாசிட் இழப்பு.. வாக்கு சதவீதம் என்ன!

5 நிமிடப் பேச்சிலேயே அனைத்தையும் விஜய் மாற்றிவிடுவார் எனக் கட்டமைக்கப்பட்ட போலி பிம்பம் நான்கே மாதங்களில் கிழிந்து தொங்கிவிட்டது. ஆட்சிக்கு வந்த இத்தனை குறுகிய காலத்தில் இப்படி ஒரு சரிவு எந்த முதலமைச்சருக்கும் இதுவரை ஏற்பட்டதில்லை. கல்லாப்பெட்டிக் கூட்டணிக் கட்சிகள் என விமர்சித்த கட்சிகளையே, இப்போது தன்னோடு இணைத்துக்கொண்டு தேர்தலைச் சந்தித்த நிலையிலும், அனைத்தையும் மீறி, ‘எப்படியாவது வெற்றி பெற்றால் போதும்’ என்ற மனநிலைக்கு அவர்களைத் தள்ளும் வகையில்தான் இடைத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன என்று குறிப்பிட்டிருந்தார்.

Follow Us