AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu Weather forecast: தமிழகத்தில் நாளை 3 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Tamil Nadu weather today : சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், குமரிக்கடல் பகுதியிலிருந்து வடக்கு உள் கர்நாடகா வரை, தமிழகம் மற்றும் தெற்கு உள் கர்நாடகா வழியாக, சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. மேலும் 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Weather forecast: தமிழகத்தில் நாளை 3 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 09 Oct 2026 17:10 PM IST

சென்னை, அக். 9:  நீலகிரி, தேனி, மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அக்டோபர் 9, 2026 இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் அக்டோபர் 10, 2026 நாளை கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி ஆகிய 3 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்ன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அக்டோபர் 15, 2026 வரை அடுத்த ஒரு வாரத்துக்கு மாநிலத்தின் பல பகுதிகளில் மழை தொடரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை 3 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், குமரிக்கடல் பகுதியிலிருந்து வடக்கு உள் கர்நாடகா வரை, தமிழகம் மற்றும் தெற்கு உள் கர்நாடகா வழியாக, சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் தாக்கத்தால் தமிழகத்தில், குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும், மழை தீவிரமடைந்துள்ளது.

இதையும் படிக்க : இரு தொகுதி இடைத்தேர்தல் தோல்வி முகம்.. ஆரவாரமின்றி காத்து வாங்கும் திமுக- அதிமுக- கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள்!

அந்த வகையில் கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மழையின்போது மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.

டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் புதுவையிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

அதனைத் தொடர்ந்து அக்டோபர் 10, 2026 நாளை கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யலாம் எனவும் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், அக்டோபர் 11, 12, 2026 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மழையின் தீவிரம் சற்றுக் குறையும். நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். மாநிலத்தின் மற்ற பகுதிகளில் லேசான மழைக்கே வாய்ப்பு உள்ளது.

அக்டோபர் 13 முதல் 15, 2026 வரை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் தமிழகம் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை தொடரும். மற்ற பகுதிகளிலும் புதுவையிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : டெபாசிட் இழந்த திமுக.. நோட்டாவை விடக் குறைந்த வாக்குகளைப் பெற்ற நாதக.. புதுச்சேரி இடைத்தேர்தல் முடிவுகள் அலசல்!

சென்னை வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யலாம். நாளையும் மேகமூட்டம் தொடரும். இரு நாட்களிலும் அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.

Follow Us