AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu Bypoll Result: மதுராந்தகம்- தாராபுரம் வாக்கு எண்ணிக்கை… கூட்டணி கட்சிகள் ஆதரவு இன்றி தனித்து 2- ஆம் இடம்… மாஸ் காட்டி வரும் திமுக!

Madhuranthakam- Dharapuram DMK Place : மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதி இடைத்தேர்தல்களில் கூட்டணி கட்சிகள் இன்றி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட்ட நிலையில், தேர்தல் முடிவுகளில் தொடர்ந்து 2- ஆம் இடம் பிடித்து வருவது பேசும் பொருளாகியுள்ளது.

Tamil Nadu Bypoll Result: மதுராந்தகம்- தாராபுரம் வாக்கு எண்ணிக்கை… கூட்டணி கட்சிகள் ஆதரவு இன்றி தனித்து 2- ஆம் இடம்… மாஸ் காட்டி வரும் திமுக!
இடைத்தேர்தலில் திமுக 2- ஆம் இடம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 09 Oct 2026 13:42 PM IST

தமிழக மக்களின் முழு கவனத்தை ஈர்த்துள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு ஒவ்வொரு சுற்றுக்களின் முடிவிலும் பதிவான வாக்குகள் விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் மரகதம் குமரவேல் 38,080 வாக்குகளுடன் முதல் இடத்திலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் பரந்தாமன் 25,480 வாக்குகள் பெற்று 2- ஆம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 21 ஆயிரத்து 820 வாக்குகள் பெற்று 3- ஆம் இடத்திலும், நாம் தமிழர் கட்சி 1,051 வாக்குகள் பெற்று 4- ஆம் இடத்திலும் இருந்து வருகின்றனர்.

இரு தொகுதி இடைத்தேர்தலில் திமுக 2- ஆம் இடம்

இதே போல, தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமா 48, 675 வாக்குகள் பெற்று முதல் இடத்திலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் சுகன்யா 39 ஆயிரத்து 039 வாக்குகள் பெற்று 2- ஆம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் பானுமதி 31,067 வாக்குகள் பெற்று 3- ஆம் இடத்திலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா 3934 வாக்குகள் பெற்று 4- ஆம் இடத்திலும் இருந்து வருகின்றனர். இந்த இரு தொகுதிகளிலும் திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி கட்சிகளின் ஆதரவு இன்றி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நிலையில், தொடர்ந்து 2- ஆவது இடத்தை தக்க வைத்து வருகிறது.

மேலும் படிக்க: அதிமுக எப்படியாது வெற்றி பெறணும் அம்மா.. எம்ஜிஆர்- ஜெயலலிதா சிலை முன் தொண்டர்கள் தவம்.. என்ன நடக்கப்போகிறது!

கூட்டணி கட்சி ஆதரவுடன் தவெக முதல் இடம்

முதல் இடத்தில் இருந்து வரும் தமிழக வெற்றி கழகம் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தேர்தலை சந்தித்து முன்னிலை வகித்து வருகிறது. இதனால், மதுராந்தகம், தாராபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம்- திராவிட முன்னேற்ற கழகம் இடையே தான் போட்டி என்ற நிலை உருவாகி உள்ளது, அத்துடன், தவெக வேட்பாளர் முதல் இடத்தில் இருந்தாலும், திமுக வேட்பாளர் தொடர்ந்து டஃப் கொடுத்து வருகிறார்.

இரு தொகுதிகளிலும் 3- ஆம் இடத்துக்கு தள்ளப்பட்ட அதிமுக

அதே வேளையில், அதிமுக வேட்பாளர்கள் இரு தொகுதிகளிலும் 3- ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள், திமுக வேட்பாளர்களுக்கு கடும் போட்டியாக உள்ளனர். மொத்தத்தில் அதிமுகவின் கோட்டையாக இருந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுமே தவெக- திமுக போட்டிகளாக மாறி உள்ளது. இவை தவெகவின் கோட்டையாக மாறும் என்று கூறப்படுகிறது. இதனிடையே, எஸ்ஐஆர் பணி மற்றும் தேர்தலில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக டி.கே.எஸ். இளங்கோவன் குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும் படிக்க: Tamil Nadu Bypoll Result: தாராபுரத்தில் டஃப் ஃபைட்.. முன்னேறிய திமுக- பின்னேறிய அதிமுக..!

Follow Us