அதிமுக எப்படியாது வெற்றி பெறணும் அம்மா.. எம்ஜிஆர்- ஜெயலலிதா சிலை முன் தொண்டர்கள் தவம்.. என்ன நடக்கப்போகிறது!
AIADMK Cadres Pray For Victory : மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அந்தக் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலை முன்பு தியானத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், இரு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற வேண்டும். இந்த தொகுதிகளை அதிமுக தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று அந்த கட்சியை சேர்ந்தவர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள முன்னாள் முதல் அமைச்சர்களான எம். ஜி. ஆர். மற்றும் ஜெயலலிதா சிலை முன்பு அதிமுக தொண்டர்கள் தவம் இருந்து பிரார்த்தனை செய்தனர். மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் அதிமுகவை சேர்ந்த மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் வெற்றி பெற்று எம்எல்ஏவாக பதவி வகித்து வந்தனர். திடீரென, அவர்கள் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்ததுடன், அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.
மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல்
இதன் காரணமாக மேற்கண்ட இரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த அக்டோபர் 6- ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக இழந்ததை மீட்க வேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. இதனால், அதிமுகவுக்கு மிக மிக முக்கியமான தேர்தலாக மாறியது. அதன்படி, இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், மதுராந்தகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் மரகதம் குமரவேல் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் பரந்தாமன் 2-ஆம் இடமும், அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 3-ஆம் இடமும் வகித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Puducherry Bypoll Result: தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்.. என். ஆர். காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி!
தவெக, திமுக, அதிமுக நிலை என்ன
ஆனால், தாராபுரம் தொகுதி வாக்கு எண்ணிக்கையில், தவெக வேட்பாளர் சத்தியபாமா முதல் 3 சுற்றுகளில் முன்னிலை வகித்து வந்தார். அடுத்த அடுத்த சுற்றுகளில் அதிமுக வேட்பாளர் பானுமதி முன்னிலை வகித்தார். இதனால், அதிமுகவை சேர்ந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். ஆனால், அடுத்தடுத்த சுற்றுகளில் அதிமுக வேட்பாளர் பானுமதி 2- ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டு, தவெக வேட்பாளர் சத்தியபாமா முன்னிலை வகித்து வருகிறார்.
இரு தொகுதிகளில் தற்போதைய நிலை
இன்னும் 10 சுற்றுகளுக்கு மேல் இருக்கும் நிலையில், பிற்பகலில் எந்த கட்சியின் வேட்பாளர் முன்னிலை பெறுவார், வெற்றி பெறுவார் என்ற தகவல் வெளிவரும். தற்போதைய (11 மணி) நிலவரம் அப்படி சத்யபாமா 21034 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பானுமதி 19730 வாக்குகளும், திமுக வேட்பாளர் சுகன்யா 1798 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா 1632 வாக்குகளும் பெற்றுள்ளனர். 2,112 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சத்திய பாமா முன்னிலை வகிக்கிறார்.
மேலும் படிக்க: சட்டம்- ஒழுங்கின் முக்கிய கண்காணிப்பாளர்.. தமிழக உள்துறை செயலாளர் அதிரடி மாற்றம்..!