AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Puducherry Bypoll Result: தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்.. என். ஆர். காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி!

Thattanchavady Assembly Constituencies Bypoll 2026 Result : புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் என் ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் சுமார் 13,350 ( 50 சதவீதத்திற்கும் மேல்) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் .

Puducherry Bypoll Result: தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்.. என். ஆர். காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி!
என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 09 Oct 2026 11:17 AM IST

புதுச்சேரி மாநிலம், தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் என். ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அசோக் ஆனந்த் 13,350 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். சுமார் 8,000 த்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை அவர் உறுதி செய்துள்ளார். வேட்பாளர் அசோக் ஆனந்த் பெற்ற வாக்கு சதவீதம் சுமார் 50 -க்கும் மேலானது ஆகும். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விநாயகம் 4,876 வாக்குகள் பெற்றுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் 3,200 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவியுள்ளனர்.

8,474 வாக்குகள் வித்தியாசத்தில் என்.ஆர். காங்கிரஸ் வெற்றி

இந்த நிலையில், 8,474 வாக்குகள் வித்தியாசத்தில் எதிர்க்கட்சி வேட்பாளர்களை தோற்கடித்து ஆளும் என். ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அசோக் ஆனந்த் அபார வெற்றி பெற்றுள்ளார். தட்டாஞ்சாவடி தொகுதியில் மொத்தமாக 21,256 வாக்குகள் இருக்கும் நிலையில், 13,350 வாக்குகள் அதாவது சுமார் 58 சதவீத வாக்குகளை என். ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் என். ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 12- ஆக தக்க வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Tamil Nadu By Election 2026 Result: மதுராந்தகம்- தாராபுரம் வாக்கு எண்ணிக்கை.. வாகை சூடப்போவது யார்?

முதல்வர் ரங்கசாமி ராஜினாமா செய்த தொகுதி

இந்த மாநிலத்தின் முதல்வராக இருந்து வரும் என். ரங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் மங்களம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இதில், தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்த நிலையில், தற்போது இடைத்தேர்தல் நடத்தப்பட்டு அதற்கான முடிவுகள் வெளியாகி உள்ளன. அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தலில் இந்த தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதல் அமைச்சருமான என். ரங்கசாமி 10,024 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

பொதுத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் பெற்ற வாக்குகள்

இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விநாயகத்தை விட 4,441 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தற்போது, அவரைவிட அந்த கட்சியின் வேட்பாளர் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. என். ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் இன்று மாலை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் நேரில் சென்று தான் வெற்றி பெற்றதற்கான வெற்றி சான்றுகளை பெற உள்ளார். இதை தொடர்ந்து, என். ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதல்வருமான ரங்கசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற உள்ளார்.

மேலும் படிக்க: சட்டம்- ஒழுங்கின் முக்கிய கண்காணிப்பாளர்.. தமிழக உள்துறை செயலாளர் அதிரடி மாற்றம்..!

Follow Us